நூலக திறப்பு விழா: மாணவர்கள் படிக்க கலைஞர் செய்தது என்ன? சாதனைகளை லிஸ்ட் போட்டு மு.க ஸ்டாலின் பேச்சு
மதுரை: மதுரையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய ஸ்டாலின், மாணவர்கள் படிக்க கலைஞர் கருணாநிதி செய்த சாதனைகள் என்னென்ன என்பதை லிஸ்ட் போட்டு பேசினார்.
மதுரையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பெயரில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. மின்னல் வேகத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் முழுவதும் நிறைவடைந்தது.

இதை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டு முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 17 ஆம் தேதி இந்த நூலகம் திறந்து வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க இன்று மதுரை வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில் புதிய நூலகத்தை திறந்து வைத்தார்.
அவருடன் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, அமைச்சர்கள், எவ வேலு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் நூலக திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொடர்ந்து மதுரையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-
தலைநகரில், தமிழ்நாட்டில் தலைமகன் அண்ணாவின் நூற்றாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கருணாநிதி அமைத்து தந்தார். இன்று கலைஞருக்கு அவரது நூற்றாண்டில் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நான் அமைத்து இருக்கிறேன். புகுமுகு வகுப்பு வரை இலவச கல்வி என்று முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளியை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த காமராஜர், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு... இதை கருணாநியிடம் போய் சொல்லுங்க என்று சொல்லி அனுப்பினார்.
அந்த பெருந்தலைவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது கருணாநிதிதான். அந்த நாளில் தான் இந்த நூலகத்தை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம். தொடக்க பள்ளிகள், உயர் பள்ளிகளை அதிகப்படுத்தினார் கருணாநிதி. பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கினார். கிராமப்புற மாணவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் சலுகைகளை கொடுத்தார். அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கினார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.
கணிணி பாடத்தை அறிமுகம் செய்தார். திமுகவின் முதல் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டில் ஏராளமான அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 68 தான். ஆனால், கலைஞர் முதல்வராக இருந்த 1969 முதல் 1975 வரையிலான கால கட்டத்தில் 97 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
சேலத்தில் ஸ்டாலின், கமல்ஹாசன் முன்பே.. விஜய்யை பங்கமாக கலாய்த்த பிரேமலதா -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications