மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முன்னாள் திமுக "புள்ளி".. பிடிஆர் கார் மீது வீசப்பட்ட செருப்பு! உண்மையில் நடந்தது என்ன? பின்னணி

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார். இரண்டு நாட்களுக்கு முன் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் லட்சுமணன் வீர மரணம் அடைந்தார்.

இதனால் புதுப்பட்டி கிராமம் சோகமாக காணப்படுகிறது. இன்று அவரின் உடல் டெல்லியில் இருந்து ஹைதராபாத் வழியாக மதுரைக்கு வந்தது.

பின்னர் அவரின் உடல் டி புதுப்பட்டி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் உடலுக்கு இன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

3 ட்விஸ்டுகள்.. 4 பூதங்கள்.. அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தோற்றால் என்ன நடக்கும் தெரியுமா? பரபர பின்னணி 3 ட்விஸ்டுகள்.. 4 பூதங்கள்.. அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தோற்றால் என்ன நடக்கும் தெரியுமா? பரபர பின்னணி

பிடிஆர் கார்

பிடிஆர் கார்

இந்த நிகழ்விற்கு வந்த நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும், அதிமுக சார்பாக ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட சிலரும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து விமானம் மூலம் பிடிஆர் மதுரைக்கு வந்தார். அப்போது விமான நிலைய வாசலில் பாஜகவினர் பலர் திரண்டு இருந்தனர். இதில் திமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சரவணன், பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்க காத்து இருந்தார்.

 பாஜக கோபம்

பாஜக கோபம்

சரவணன் இப்போது பாஜகவில் இருக்கிறார். இந்த நிலையில் சரவணன் நிறைய தொண்டர்களோடு விமான நிலையத்தில் கூறப்படுகிறது. சரவணன் மற்றும் அவரின் ஆட்களை பார்த்த பிடிஆர் இவர்கள் ஏன் இங்கே நிற்கிறார்கள். லட்சுமணன் உடல் அவரின் வீட்டிற்கு செல்கிறதே அங்கு போய் அஞ்சலி செலுத்தட்டும் தேவையில்லாத கூட்டம் ஏன் என்று கூறி உள்ளார். இதையடுத்து பாஜகவினரை அங்கிருந்த போலீசார் கலைத்து உள்ளனர்.

செருப்பு வீசல்

செருப்பு வீசல்

இதன் காரணமாக விமான நிலையத்தில் சின்ன சலசலப்பு ஏற்பட்டது. இதன்பின் அரசு மரியாதை செலுத்தும் போது பாஜகவினர் உள்ளே புகுந்து முன்னாள் நிற்க முயன்று உள்ளனர். அப்போது இது அரசு மரியாதையை செலுத்தும் இடம். கட்சிக்காரர்களுக்கு இடமில்லை என்று அங்கிருந்த போலீசார் கூறி உள்ளனர். இதனால் பாஜகவினர் காக்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் பிடிஆர் அங்கே அஞ்சலி செலுத்தினார்.

 அண்ணாமலை லேட்

அண்ணாமலை லேட்

லேட்டாக வந்த அண்ணாமலை அங்கே காக்க வைக்கப்பட்டார். பொதுவாக அரசு மரியாதையை செலுத்தும் போது கட்சி ரீதியான ஆட்களை விட மாட்டார்கள். இதே முறைதான் இன்று பின்பற்றப்பட்டது. ஆனால் பாஜகவினர் சிலர் அண்ணாமலையை வேண்டும் என்றே காக்க வைத்துவிட்டனர் என்று முறையீடு செய்தனர். இதனால் லட்சுமணனின் சொந்த வீட்டிலும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அஞ்சலி செலுத்திவிட்டு பிடிஆர் திரும்பி வரும் வழியில் பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீசப்பட்டு உள்ளது.

 காரணம் என்ன?

காரணம் என்ன?

பிடிஆர் வாகனம் அவரின் அலுவலகம் நோக்கி சென்ற போது காலணிகள் வீசப்பட்டன. இதனால் அங்கிருந்த ராணுவத்தினர், போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி திமுகவினர் தரப்பில் விசாரித்ததில்.. விமான நிலையத்திலேயே பாஜகவினர் நியூசன்ஸ் செய்தனர். முக்கியமாக பாஜக சரவணன் ஆட்களை அழைத்து வந்தார்.

விளம்பரம்

விளம்பரம்

ஒரு உடல் வரும் இடத்தில் பாஜகவிற்கு விளம்பரம் தேடுவது போல குவிந்து இருந்தனர். இதனால் தேவையில்லாத குழப்பம் வேண்டாம் என்று அமைச்சர் பிடிஆர் அவர்களை கிளம்பி போக சொன்னார். அதன்பின் அரசு மரியாதையை செலுத்தும் வரை கூட பொறுத்திருக்காமல் உள்ளே புகுந்து அஞ்சலி செலுத்த முயன்றனர். இதனால்தான் சிக்கல் ஏற்பட்டது. ஒரு மரணத்தில் கூட தேவையில்லாத அமளி செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று மதுரை திமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

English summary
What happened in Madurai today? Who did throw sandals in PTR Palanivel Thiagarajan car? மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X