மதுரையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி.. சேற்றில் விழுந்த வாலிபர்.. உறவினர்களை அதிர வைத்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை யாகப்பாநகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர்கள் அஜித்கண்ணா, பிரகாஷ். இவர்கள் 3 பேர் மீது வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தினேஷ்குமார், போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக கால்வாயில் விழுந்து இறந்தார். ஆனால் போலீஸ்தான் அவரது நிலைக்கு காரணம் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவருடைய மகன் தினேஷ்குமாருக்கு 31 வயது ஆகிறது இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர்கள் அஜித் கண்ணா, பிரகாஷ். இவர்கள் 3 பேர் மீதும் வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம். இதில் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக 3 பேரையும் மதுரை அண்ணாநகர் போலீசார் நேற்று காலை அழைத்துச் சென்றார்களாம்.

What happened to the young man who fell into the mud while escaping from police custody in Madurai

மதுரை வண்டியூர் அம்மா திடல் அருகே புறக்காவல் நிலையத்தில் அஜித் கண்ணா, பிரகாஷ், தினேஷ்குமார் ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்து அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு 3 பேரையும் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்கள். போலீஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றியபோது திடீரென தினேஷ்குமார் மட்டும் தப்பி ஓடியதாகவும், அவரை போலீசார் விரட்டியதாகவும், அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் தண்ணீரில் குதித்த தினேஷ்குமார், சகதியில் சிக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

உடனே போலீசார், மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்தனர். ஆனால் சேற்றில் சிக்கி தினேஷ்குமார் அதற்குள் உயிரிழந்து விட்டார். அவரது உடலை சேற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே தினேஷ்குமார் உயிரிழந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மதுரை அண்ணாநகர் பேருந்து நிலையம் முன்பு திரண்டனர். அப்போது, தினேஷ்குமாரை போலீசார் அடித்துக்கொன்று, உடலை கழிவுநீர் கால்வாய் சேற்றில் வீசி நாடகமாடுவதாகவும் தெரிவித்தார்கள். நடந்த சம்பவத்தை போலீசார் மறைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்கள். மேலும், தினேஷ்குமார் மரணத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்ட
அங்குள்ள பிரதான சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தையில் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+