ஆதிகாலத்திலேயே திட்டமிட்டு கட்டப்பட்ட.. மதுரையிலா இப்படி? நொறுங்க வைத்த சம்பவம்! பிடிஆர் பார்க்கணும்
மதுரை: மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த 2 சம்பவங்கள் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை என்னும் மாநகர் ஆதிகாலத்திலேயே திட்டமிட்டு கட்டப்பட்ட மாநகராட்சி ஆகும். முறையான திட்டமிடலுடன் இந்த மாநகராட்சி கட்டப்பட்டது.
ஆனால் கடந்த 10 - 15 வருடங்களாக இந்த மாநகராட்சி சரியாக கவனிக்கப்படவில்லை. முழுக்க முழுக்க சாலைகளில் மண், மக்கள் நடக்க நடைபாதை இல்லாத சாலைகள், சாலைகளிலேயே ஏகப்பட்ட குழிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லை என்று நிறைய விமர்சனங்கள் உள்ளன.

அந்த வகையில்தான் அங்கே எல்காட் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, மதுரை மாநகரின் மைய பகுதியான மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள எல்காட் IT பூங்கா இருக்கும் சாலையில் இன்னும் தெரு விளக்கு வசதி இல்லை.1960 ஆம் ஆண்டில் இன்னும் இருப்பது போன்ற உணர்வு. அங்கு வேலை பார்க்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மின் விளக்குகள் வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது.
பல லட்சம் பேர் தினமும் செல்லும் எல்காட் IT பூங்கா பகுதியில் கூட மின் விளக்குகள் இல்லாத நிலைமை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அதேபோல் நேற்று முதல்நாள் அங்கே மழை பெய்தது. இதனால் சாலை முழுக்க தண்ணீர் தேங்கியது. முன்பு போல் மதுரை இல்லை. மதுரையில் மழை பெய்தாலே தண்ணீர் செல்ல வழியே இல்லாமல் உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துங்கள். மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அங்கே பெய்த ஒரு 55 mm மழைக்கு தான் இப்படிப்பட்ட நிலை. தண்ணீர் அவ்வளவு எளிதில் செல்வது இல்லை. அண்ணா நகர்,ஜெயில் ரோடு பகுதி சாலைகள் படுமோசம் மழைநீரில் பள்ளம் தெரியாமல் விழுந்தவர்கள் அதிகம். சாலைகள் அனைத்தையும் சீர்செய்து மழை நீர் செல்ல முயற்சி எடுங்கள்
இடம்: நிர்மலா பள்ளி அருகில், என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்துள்ளனர்.
அமைச்சர் பிடிஆர் மதுரைக்கு நிறைய வாக்குறுதிகளைவழங்கினார். ஆனால் இங்கே அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முக்கியமாக ஐடி பார்க் கட்டுமானம் தொடங்கப்படவில்லை என்று விமர்சனங்களை வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரான மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கனவு நிஜமாக மாறும் சூழ்நிலை உள்ளது. மதுரையில் டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு டெண்டர் விட உள்ளது.
2022ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 12 மாடிகள் கொண்ட தகவல் தொழில்நுட்ப அலுவலகம் கட்டும் திட்டம், மாட்டுத்தாவணியில் 5. ஏக்கர் நிலப்பரப்பில் வரும். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் டைடெல் பார்க் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான டெண்டர் சில நாட்களில் விடப்பட உள்ளது. மதுரையில் அமைய உள்ள ஐடி பார்க்கிற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த பின் அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளது. இதற்கான புகைப்படம் வெளியாகி உள்ளது.
மதுரையில் அமைய உள்ள ஐடி பார்க்கிற்கான மாதிரி வரைபடத்தை டாடா நிறுவனம் தமிழ்நாட்டின் டைடல் நிறுவனத்திடம் வழங்கி உள்ளதாம். இதையடுத்து விரைவில் ஐடி பார்க் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் திருச்சி & மதுரைக்கான டைடல் பார்க் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார்.
மதுரையில் 345 கோடி செலவில் 640,000 சதுர அடி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் 350 கோடி செலவில் 630,000 சதுர அடி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications