மதுரை பொண்ணு.. யாருமே எதிர்பார்க்கல.. போலீஸுக்கே போயாச்சு.. "அந்த" கோலத்தில் வீடியோ.. சபாஷ் போலீஸ்
மதுரை: மதுரையை சேர்ந்த அந்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.. இவரிடம் சிக்கிய பெண்கள் யார் யார் என்ற விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் நடக்கும் புதுபுது விநோத மோசடிகள் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்தபடியே உள்ளனர்.. அதிலும் கிரைம் போலீஸார், இதுகுறித்து பலமுறை அலர்ட் விடுத்து வருகிறார்கள்.

பிரபல நடிகை: பிரபல நடிகைகளின் முகத்தை மார்பிங் செய்வது, லிங்க்குகளை அனுப்ப சொல்லி, அப்பாவி மக்களின் வங்க கணக்கில் உள்ள பணத்தை அபேஸ் செய்வது, என மோசடிகள் நடக்கின்றன.
அதேபோல, காதல் என்ற பெயரில் இளம்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களின் ஆபாச போட்டோக்களை வைத்து, பணம் பறிக்கும் அபாயங்களும் நடந்து வருகின்றன.
பெரும்பாலும், இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்படுவது பெண்களாகவே இருப்பதால், அவமானம் கருதி பலரும் புகார் தருவதில்லை.. ஒரு சில பெண்கள் மட்டுமே தைரியமாக வெளியே வந்து போலீஸில் புகார் தருகிறார்கள்.. அப்படித்தான் ஒரு இளம்பெண் துணிந்து, போலீசுக்கு சென்றிருக்கிறார்.
அந்த இளம்பெண் மதுரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்தவர்.. தன்னுடைய வீட்டு அருகிலேயே வசித்து வரும் அருண்குமார் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார்..
வீடியோ கால் : ஒருநாள், இளம்பெண்ணை காதலிப்பதாக அருண்குமார் ஆசை வார்த்தைகள் சொல்லவும், அவரது பேச்சில் இளம்பெண்ணும் விழுந்துள்ளார்.. அருண்குமாரை இளம்பெண் உருகி உருகி காதலித்தார்.. ஒருகட்டத்தில் வீடியோ கால் மூலமாகவும் அடிக்கடி பேசி வந்துள்ளனர்..
எப்போதெல்லாம் வீடியோ காலில் பேசுகிறார்களோ, அப்போதெல்லாம் நிர்வாணமாக, அந்த பெண்ணை பேச சொல்லி அருண்குமார் கட்டாயப்படுத்துவாராம்.. தன்னை திருமணம் செய்து கொள்ள போகிறவர்தானே என்ற எண்ணத்தில், இளம்பெண்ணும், அடிக்கடி நிர்வாணமாக வீடியோ காலில் அருண்குமாரிடம் பேசியதாக தெரிகிறது.
கருத்து வேறுபாடு: நாளடைவில், 2 பேருக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஆரம்பமாயின.. அருண்குமாரின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அதுகுறித்து, இளம்பெண் கேள்வி கேட்டுள்ளார்.. இது அருண்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
இதுவரை வீடியோ காலில் பேசப்பட்ட, அத்தனை நிர்வாண வீடியோக்களும் ரிக்கார்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறி, அந்த வீடியோக்களை இளம்பெண்ணுக்கும் போட்டி காட்டி மிரட்டினாராம் அருண்குமார்.
தன்னுடைய நிர்வாண வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக மதுரை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்... அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை: இறுதியில், அருண்குமாரின் லீலைகள் தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்துள்ளார்.. இன்னும் எத்தனை பெண்களை இதுபோல ஏமாற்றி மோசடி செய்து மிரட்டினார் என்ற விசாரணையையும் போலீசார் துவக்கியிருக்கிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications