Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு!
மதுரை: தமிழக சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் இன்னும் மேலூர் தொகுதிக்கு மட்டும் அறிவிக்காதது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தொகுதிகள் ஒதுக்கப்பட்டு நாட்களான நிலையிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதில் ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ள 13 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மயிலாப்பூர்- தமிழிசை
தளி- டாக்டர் நாகேஷ் குமார்
மொடக்குறிச்சி- கிருத்திகா சிவகுமார்
உதகை- போஜராஜன்
அவிநாசி- எல்.முருகன்
திருப்பூர் தெற்கு- எஸ்.தங்கராஜ்
கோவை வடக்கு- வானதி சீனிவாசன்
கந்தர்வகோட்டை- சி.உதயகுமார்
புதுக்கோட்டை- என்.ராமசந்திரன்
திருப்பத்தூர்- கே.சி.திருமாறன்
மதுரை தெற்கு- ராம சீனிவாசன்
சாத்தூர்- நயினார் நாகேந்திரன்
திருச்செந்தூர்- கேஆர்எம் ராதாகிருஷ்ணன்
வாசுதேவநல்லூர்- ஆனந்தன் அய்யாசாமி
ராதாபுரம்- எஸ்.பி.பாலகிருஷ்ணன்
நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி
விளவங்கோடு- விஜயதாரணி
ஆவடி-ராஜசிம்ஹ மகிந்திரா
திருவண்ணாமலை- சி.ஏழுமலை
தஞ்சாவூர்- எம்.முருகானந்தம்
திருவாரூர்- கோவி சந்துரு
அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்
ராசிபுரம்- டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்
ராமநாதபுரம்- கே.நாகேந்திரன்
பத்மநாபபுரம்- பி.ரமேஷ்
மானாமதுரை- வி.பாலகணபதி
குளச்சல்- தாரகை கத்பட்
ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு இன்றும், திங்கள்கிழமை மட்டுமே காலக்கெடு இருக்கும் நிலையில் மேலூர் தொகுதிக்கு ஏன் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது.
அதாவது மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை பொருத்தமட்டில் கார்த்தி சிதம்பரம் ஒருவரையும், மாணிக்கம் தாகூர் ஒருவரையும் சொல்கிறார்களாம். இந்த தேர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் வேட்பாளர் தேர்வில் இழுபறி இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த சில தினங்களாகவே தேர்தல் பணிகள், பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கும் மாணிக்கம் தாகூரால்தான் இந்த இழுபறியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications