மதுரை ஏன் சென்னை, கோவை போல் வளராமல் போனது.. கள யதார்த்தம் என்ன?
மதுரை: தொழில் முதலீடுகள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்களிலும் அதிகமாக வருகின்றன. மதுரை ஏன் சென்னை, கோவை போல் வளராமல் போனது.. கள யதார்த்தம் என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருவதே இல்லை... மதுரை மாநகரம் ஒரு காலத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு தொழில், வளர்ச்சி, நகர உள்கட்டமைப்பு என எல்லாவற்றியிலும் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய அளவில் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ந்துள்ளன.

கோவையை பொறுத்தவரை, கோவை நகரம் முதல் திருப்பூர் வரையிலும் கோவை முதல் மேட்டுப்பாளையம் வரையிலும், கோவை முதல் பல்லடம் வரையிலும், கோவை முதல் அன்னூர் வரையிலும், கோவை முதல் பொள்ளாச்சி வரையிலும் , கோவை முதல் பாலக்காடு வரையிலும் எல்லா சாலையிலும் தொழில் நிறுவனங்கள் நிரம்பி கிடக்கின்றன.
அப்படியே சென்னையை எடுத்துக் கொண்டால், சுற்றியுள்ள 60 கிலோமீட்டர் தூரத்திற்கு மூச்சுவிட முடியாத அளவிற்கு பரந்துவிரிந்து வளர்ந்துள்ளது. சென்னை நகரத்தை தாண்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் மதுரையில் அப்படியான வளர்ச்சி என்பது இல்லை. வளர்ச்சி அடைந்த சென்னை, கோவைக்கு தேவையான பணியாளர்களை அனுப்பும் நகரமாக மட்டுமே மதுரை விளங்குகிறது. மதுரை உள்கட்டமைப்பு ரீதியாக 1990களுக்கு பிறகு பெரிய அளவில் வளரவில்லை என்பதே கசப்பான உண்மை. அதேநேரம் சென்னையும், கோவையும் 1990களில் உலகமயமாக்கலுக்கு பிறகு உள்கட்டமைப்பு, தொழில் நிறுவனங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முன்னேறவில்லை..

இதுபற்றி பிரபல எழுத்தாளரான முரளி டீக்கடையார் என்ற பெயரில் வெளியிட்டுள்ள பதிவில், "90 களுக்கு முன் மதுரை உற்பத்தி துறையில் ஒரு சிறந்த நகரமாகத் தான் இருந்தது. மதுரைக்கு வரும் எல்லா திசைகளிலும் ஒரு தியாகராஜர் குழும மில் இருக்கும். மதுரை கோட்ஸ், ஹார்வி மில்கள் இருந்தன. ஆர்வி மில்லில் பணியாற்றியவர்களுக்கு தனி ரயில் சேவை இருந்தது. பின்னர் அவர்கள் குடியிருப்பு ஹார்வி நகராக மாறியது. ஹார்வி மில் பிரிட்டிஷ் மேலாளரின் வீடு தான் தற்போதைய பசுமலை தாஜ் ஹோட்டல்.
தற்போது பல லட்சம் கோடி மதிப்புள்ள டிவிஎஸ் குழுமத்தின் ஆரம்பம் மதுரை தான். அவர்களின் பல தொழிற்சாலைகள் இன்றும் சிறப்பாக இயங்கிக் கொண்டுள்ளன. இது தவிர பென்னர் போன்ற தொழிற்சாலைகள்.
90 களின் உலகமயமாக்களுக்குப் பிறகு உற்பத்தி துறையில் மதுரை தேங்கி போனது அனைவரும் அறிந்ததே. தேவையான என்ஹேன்ஸ்மெண்டுகளை அந்த காலகட்டத்தில் செய்ய தவறினார்கள். அதே சமயத்தில்தான் சாஃப்ட்வேர் துறை வெகுவாக வளர ஆரம்பித்தது.
தமிழ்நாட்டில் சென்னையை மட்டும் தான் பன்னாட்டு நிறுவனங்கள் அப்போது குறி வைத்தன. காரணம் அவர்களுக்கு ஏற்ற இன்ப்ரா மற்றும் மனித வளம் அங்கே கிடைத்தது. அந்த நேரத்தில் மதுரையின் விமான நிலையம் ஒரு பேருந்து நிலையம் போலத்தான் இருக்கும். மற்றவற்றை இணைக்க பெரிய சாலை வசதியும் இல்லாமல் இருந்தது.
2010க்கு பின்னர் தான் மதுரை விமான நிலையம் ஓரளவாவது விரிவுபடுத்தப்பட்டது. அருகில் இருக்கும் துறைமுகமான தூத்துக்குடிக்கு நான்கு வழி சாலை போடப்பட்டது. தற்போது நத்தம் பகுதிக்கும் ஒரு பெரிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
சாப்ட்வேர் துறைக்கு தேவையான மனித வளமும் தற்போது பெருகிவிட்டது. டைடல் பார்க்கும் நன்றாகத் தான் இப்போது செயல்படுகிறது. ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ஹைடெக் அராய் உற்பத்தி நிறுவனம் ஏராளமான தொழிற்சாலைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
கோவிட் சமயத்தில், பெங்களூரில் இருப்பது போல ஆஃபீஸ் ஸ்பேசஸ்கள் மதுரையில் அமைக்கலாம். மதுரை மக்கள் இங்கேயே பணியாற்றிக் கொள்ளலாம் அதன் மூலம் மனித வளம் பெருகும். ஏனென்றால் இப்போது இணைய சேவை தங்கு தடையின்றி கிடைக்கிறது. என்பது போன்ற காரணங்கள் இருந்தாலும், ஏன் அவைகள் செயல்படுத்தப்படவில்லை? எதனால் அந்த முன்னெடுப்பு சாத்தியப்படாமல் போனது?
இன்றும் கூட மதுரையில் பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் முதல் தேர்வு சென்னை அல்லது கோவை கல்லூரிகளாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஈர்ப்பு மாணவர்கள் இடத்தில் இருக்கிறது. அதுபோலவே மிகச் சிறந்த பள்ளிகள் என்ற கணக்கில் வேறு பகுதி மாணவர்களை எல்லாம் கவர்ந்து இழுக்கும் அளவிற்கு இங்கே பள்ளிகள் இல்லை.
பெரிய நிறுவனங்கள் வந்தால் அதில் வேலை செய்ய வேறு மாநில/ மாவட்ட பணியாளர்கள் வந்தால் அவர்கள் குழந்தைகளின் கல்வி பொழுதுபோக்கு போன்றவற்றிற்கு ஒரு உத்திரவாதம் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் எல்லோரும் அதை எதிர்பார்க்கிறார்கள். அப்படியான உள் கட்டமைப்பு இங்கே இருக்கிறது, நீங்கள் நன்றாக சௌகரியமாக வாழலாம் என்ற எண்ணத்தை மற்ற மாவட்ட, மாநில மக்களுக்கு காட்ட முனைந்தால் தான் அவர்கள் வர விருப்பம் காட்டுவார்கள்.
சென்னை கோவையில் காஸ்ட் ஆப் லிவிங் அதிகம் என்றாலும் மக்கள் தொடர்ந்து அங்கே படை எடுக்க அந்த வசதி வாய்ப்புகள் தான் காரணம். இன்னும் ஏராள வாய்ப்புகள் இருக்கிறது. மதுரை தன் கன்சர்வேட்டிவ் மனநிலையிலிருந்து கொஞ்சம் மாற வேண்டும். தற்போதைய ஜெனரேஷனுக்கு சாப்பாடு, தங்க இடம் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை எல்லோருக்கும் வசதி இருக்கிறது. அதற்கு அடுத்த நிலையை தான் மனம் விரும்பும். அந்த நிலையை இங்கே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மதுரையின் முகத்தை மாற்ற அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்.
சுற்றி இருக்கும் ஊர்களுக்கான ஒரு வியாபார கேந்திரமாகவும் மருத்துவ கேந்திரமாகவும் மட்டும் மதுரை இருந்தால் போதாது. இங்கே வந்தால் நன்றாக தொழில் செய்ய முடியும், வருபவர்களும் சவுகரியமாக வாழ முடியும் என்ற எண்ணம் ஏற்படும்படி ஒரு அமைப்பு இருக்க வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.
-
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications