நல்லாருக்கியாப்பா? சட்டென அழகிரியை கட்டிப்பிடித்த பிடிஆர்.. வந்து விழுந்த கேள்வி! அடடே கவனிச்சீங்களா
மதுரையில் எஸ. ஆர் கோபியின் மகள் திருமண விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள உதயநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
மதுரை: மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை முக அழகிரி சந்தித்தது பல்வேறு கவனம் பெற்றுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் முக அழகிரியை மாட்டு பொங்கல் அன்று மதுரையில் சந்தித்தார். மதுரையில் இருக்கும் வீட்டில் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா அழகிரியுடன் இந்த சந்திப்பை நடத்தினார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு சென்றவர் இந்த சந்திப்பை திடீரென நிகழ்த்தியது விவாதங்களை ஏற்படுத்தியது.
அரசியலில் இருந்து ஒதுங்கிய பின் மு க அழகிரி பெரிதாக யாரையும் சந்திக்கவில்லை. வெளியே பெரிதாக அவர் தலைகாட்டவில்லை.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற பின் முதல்முறையாக இப்படி அழகிரியை போய் நேரில் சந்தித்தார் . அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கு தயா அழகிரி வந்திருந்த நிலையில் அழகிரியை உதயநிதி பார்க்க முடியவில்லை. இதனால் மரியாதை நிமித்தமாகவே அழகிரியை உதயநிதி பார்த்ததாக கூறப்படுகிறது. விழா நாட்களுக்கு இவர்கள் போனில் மாறி மாறி வாழ்த்து சொல்வது வழக்கம். இந்த முறை நேரடியாகவே வாழ்த்து சொல்லிவிடலாம் என்றுதான் உதயநிதி வந்ததாக கூறப்படுகிறது. அதெல்லாம் போக அழகிரிக்கு லேசாக உடல்நிலை சரியில்லை, அவருக்கு கொஞ்சம் மன வருத்தமும் இருந்தது.

விவாதங்கள்
அதனால்தான் உதயநிதி வந்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார் என்கிறார்கள். இது அரசியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துமா? அழகிரி மீண்டும் எழுச்சி பெற இது வழி வகுக்குமா? அவர் மதுரையில் மீண்டும் ஆவர்த்தனம் செய்வாரா? அரசியலில் ரீ என்ட்ரி கொடுப்பாரா என்றெல்லாம் பேச்சுக்கள் எழுகின்றன. ஆனால் இது முழுக்க முழுக்க குடும்ப ரீதியான சந்திப்புதான் அரசியல் ரீதியாக இது எந்த விதமான மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - அழகிரி ஆகியோர் சந்தித்துக்கொண்டனர்.

சந்திப்பு ஏன்?
நேற்று மதுரையில் எஸ் . ஆர் கோபியின் மகள் திருமண விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்கனவே வேறு சில பணிகள் இருந்ததால் அவரால் வர முடியவில்லை. அவர் சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். மதுரையில் நடந்த இந்த திருமணத்தில் திமுகவின் டாப் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்பு எஸ். ஆர் கோபி அழகிரிக்கு நெருக்கமாக இருந்தார். இதனால் அழகிரியையும் அவர் அழைத்து இருந்தார்.

அழகிரி
அதேபோல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் எஸ். ஆர் கோபி நெருக்கம். இந்த நிலையில்தான் அவரையும் அழைத்து இருந்தார். இதையடுத்து பிடிஆர் வந்து சிறிது நேரம் கழித்து அழகிரியும் இந்த திருமணத்திற்கு வந்தார். அவரை பார்த்ததும் பிடிஆர் அப்படியே கட்டிபிடித்துக்கொண்டார். வாங்க அண்ணே.. எப்படி இருக்கீங்க.. என்று பிடிஆர் பாசமாக விசாரித்தார். அதன்பின் பிடிஆரிடம் அழகிரியும் அன்பாக விசாரித்தார்.. அம்மா உடல்நிலை எப்படி இருக்கிறது.. மனைவி குழந்தை எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார். பின்னர் நீங்கள் சிறப்பாக பணி செய்கிறீர்கள். கட்சி பணி, அமைச்சர் பணிகளை சிறப்பாக செய்கிறீர்கள். தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று பாராட்டினார். அடுத்தடுத்து அழகிரி இப்படி முக்கிய சந்திப்புகளை நடத்துவது அரசியல் உலகில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications