Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை. ஆனால் "மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை" என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சில கொள்கையற்றவர்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது. இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் "சினிமா சங்கிக்கு" மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும் என்று சுந்தர் சிக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

பிடிஆர் மதுரை மத்திய தொகுதியில் ஒன்றுமே செய்யவில்லை அதிமுக கூட்டணி வேட்பாளர் இயக்குனர் சுந்தர் சி செல்லும் இடமெல்லாம் விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலடியாக மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்,"இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை.

Why did PTR criticize Sundar C stating that he lacks the ability to read and comprehend

எனது அணுகு முறை

2016, 2019, 2021, 2022, 2024 என எந்தத் தேர்தலாக இருந்தாலும், எங்கள் அணுகுமுறை எப்போதும் தெளிவானதே: நாங்கள் யார், நாங்கள் செய்துள்ள பணிகள் என்ன, மக்கள் எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பரப்புரைகளின் மையக் கருத்தாக இருந்து வருகிறது.

மதுரைக்கு எதுவும் செய்யவில்லையா

ஆனால் "மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை" என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் - பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது.

சினிமா சங்கி

அதே போன்று, இத்தகைய அவதூறுகளுக்கு துணை நிற்கும் சந்தியா ரவிஷங்கர், வினோத் அருளப்பன், சென்னை அப்டேட்ஸ் - ராகுல் போன்ற பிற தரகர்களையும் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன்.அதனால், இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் "சினிமா சங்கிக்கு" மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும். நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்குவதற்காக மட்டுமே இயங்கும் சாதியவாதக் கட்சியின் முகத்திரையும் கிழிக்கப்படும்!" இவ்வாறு கூறியுள்ளார்.

தவறாக பேசியது இல்லை

இதனிடையே சொன்னபடியே பிரச்சாரத்தில் பிடிஆர் பேசும் போது, "எனது அரசியல் வாழ்க்கையில் எப்போதும் கட்சியின் கொள்கை, செயல்பாடு, ஆட்சியில் செய்த மற்றும் செய்யப்போகும் திட்டங்கள் சாதனைகள் பற்றியே பேசியுள்ளேன். என்னை எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் குறித்து நான் எந்த ஒரு வார்த்தைகூட தவறாக பேசியது இல்லை. அவர்களும் என்னை பற்றி தவறாக பேசியது இல்லை.

சுந்தர் சி

ஆனால், மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக நடிப்பதற்காக 'சினிமா சங்கி' ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கும் மதுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இவரது தயாரிப்பாளரான புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இவரை வேட்பாளராக நடிப்பதற்காக களம் இறக்கியுள்ளார்.

குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்

இந்த வேட்பாளரின் மனைவி (குஷ்பு), ஜிம்னாஸ்டிக் சாம்பியன் போன்று கடந்த 15 - 20 ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ், பாஜக என மூன்று கட்சிகள் தாவியவர். தற்போது, நான்காவது முறையாக ஏ.சி. சண்முகத்தின் கட்சி வழியாக, 5-ஆவது கட்சியாக இவரது கணவரை அதிமுகவில் போட்டியிட வைத்துள்ளார். அந்த வேட்பாளர், தான் வெற்றி பெற்றால் மதுரையில் வெறும் 15 நாட்கள் மட்டுமே இருப்பேன் என்று வெளிப்படையாகவே கூறுகிறார்.


இது சரியில்லை

ஏன் அவரை 'சினிமா சங்கி' என கூறுகிறேன் என்றால், அவர் வந்தவுடன் முதலில் சென்றது ஆர்எஸ்எஸ் அலுவலகம் தான். அவருக்கு மதுரையைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல், இயக்குநர் பார்த்திபன் குமார் என்பவர் கற்றுக்கொடுத்தபடி, எல்லா இடத்திலும் "இது சரியில்லை" என்ற வார்த்தையை மட்டுமே பேசி வருகிறார். குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், மன அமைதி கிடைக்கும் என்றுதான் மதுரை மக்கள் கூறுவர். ஆனால், இந்த வேட்பாளர் சுந்தர் சி சென்றால், பார்த்து அழுகை வருவதாக கூறுகிறார். சுந்தர் சி, கோயில் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

கோயில் பணிகள்

கடந்த 2018-ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு அந்த மண்டபத்தை சீரமைக்க அவர்கள் ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சி 2021-ல் அமைந்த பின்னர். ரூ.35 கோடி மதிப்பீட்டில் 20 அடி உயர 70 கல் தூண்கள் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. வரும் செப்.17-ம் தேதி கோயில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தெரிந்துகொண்டு சுந்தர் சி பேசவேண்டும்.

சுந்தர் சி

மேலும், கழிப்பறை வசதியில்லை என அவர் கூறியுள்ளார். ஆனால், நான் வெற்றிபெற்ற பின்னர், 3 மடங்கு கூடுதலாக கழிப்பறைகள் கட்டியுள்ளேன். இது தெரியாமல் அவர் குறை கூறுகிறார். இந்த வேட்பாளர் 11-ஆம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி பெற்றவர், என்பதால் எதையும் படித்துப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை. மதுரையின் சாக்கடைப் பிரச்சினைக்கு ரூ.3,500 கோடி திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ரூ.400 கோடி நிதி ஒதுக்கி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது" இவ்வாறு பிடிஆர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+