டிஐஜியிடம் நேரடியாக மாணவிகள் புகார்.. பாலியல் தொல்லை தந்ததாக மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் கருப்பையா கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உளவியல் துறை பேராசியராக பணியாற்றி வரும் கருப்பையா. இவர் மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கருப்பையா மீது மாணவிகள் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைகழகத்தில் புகார் அளித்தும் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டினர். இதனிடையே மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து மாணவிகள் புகார் அளித்தனர். இதையடுத்து சமயநல்லூர் மகளிர் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்துமாறு டிஐஜி பொன்னி உத்தரவிட்டார்.
அதன் பேரில், மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் குற்றச்சாட்டின் முகாந்திரம் இருப்பதாகக் கருதிய போலீசார், பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் கருப்பையாவை கைது செய்தனர். கருப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications