வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி
மதுரை: ஹார்ட் டிஸ்க் திருட்டு விவரத்தில் விசாரணை நடத்து வருகிறது. காவல்துறை அதிலிருந்து தற்போது வரை என்ன திருட்டு நடந்தது என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ஹார்ட் டிஸ்க் திருடு போனது என்றவுடன் உத்தமர் செந்தில் பாலாஜி ஏன் ஆஜராக வேண்டும் என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் துணை ஆணையர், மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் அரசு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்," மதுரை மாவட்டத்தில் டாஸ்மார்க் மது விற்பனையை சீராக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் எத்தனை குவாரிகள் இயங்கி வருகிறது. எத்தனை குவாரிகள் மூடப்பட்டுள்ளது என கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் சேர்ந்து கணக்கிடு செய்வார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு விடுங்களுக்கு முன்பு இப்படி அமைதியாக இருந்ததோ அதை தான் மக்கள் விரும்புகிறார்கள். திமுகவைப் பார்த்து எங்கள் முதல்வர் பயப்படவில்லை.
முன்னாடி இருந்த முதலமைச்சர்கள், அவங்களுடைய இருப்பை காட்டுவதற்காக செய்தியாளர்களை சந்தித்தார்கள். செய்தியாளர்களை சந்தித்தால் தான் அரசினை நடத்த வேண்டும் என்பது இல்லை. தொடர்ந்து தமிழக மக்களை சந்தித்து வருகிறார் முதல்வர்.
ஹார்ட் டிஸ்க் திருட்டு விவரத்தில் விசாரணை நடத்து வருகிறது. காவல்துறை. அதிலிருந்து தற்போது வரை என்ன திருட்டு நடந்தது என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ஹார்ட் டிஸ்க் திருடு போனது என்றவுடன் உத்தமர் செந்தில் பாலாஜி ஏன் ஆஜராக வேண்டும். அண்ணாமலை இயக்கம் தொடங்கி குறித்த கேள்விக்கு யார் வேண்டுமானாலும் இயக்கம் துவங்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications