மதுரை முருகன் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு.. மூச்சுத் திணறலால் வரும் வழியிலேயே சோகம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இந்து முன்னணி சார்பில் இன்று நடக்கும் முருகன் மாநாட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சென்றுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க வந்தபோது சேலம் ஆத்தூரை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார். சேலம் ஆத்தூரில் இருந்து 20 பேர் பயணித்த வேனில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கவிதா என்ற பெண் பலியானார்.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

woman-dies-on-the-way-to-madurai-murugan-devotees-conference

சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டில் சுமார் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன. அறுபடை கோவில் கோபுரங்களுடன் முகப்பு தோற்றமும், உள்ளே சென்றால் முருகப்பெருமானை தரிசிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டை ஒட்டி சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் பங்கேற்க வாகனங்களில் வருகை தந்துள்ளனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர்கள் சுமார் 20 பேர் ஒரு வேனில் மேலூர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது கவிதா (வயது 55) என்ற பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கவிதாவை உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+