முட்டி போட்டபடியே.. பெட்ரூமில் ஜன்னல் கம்பியில் தொங்கிய மகாலட்சுமி.. ஒரே மர்மம்.. மதுரையில் பரபரப்பு
பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை: ஜன்னல் கம்பியில் கயிறு கட்டி, தூக்கு போட்டு தொங்கி உள்ளார் ஒரு பெண் போலீஸ்.. முட்டி போட்டபடியே சடலமாக கிடந்துள்ளார்.. இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி விட்டு வருகிறது.. மதுரை போலீசார் விசாரணையை கையில் எடுத்து உள்ளனர்..!
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கஞ்சம்பமடியை சேர்ந்தவர் மகாலட்சுமி.. 25 வயதாகிறது.. கடந்த 2018-முதல், கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை பார்த்து வந்தார்...
இதற்காக அவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் குவார்ட்டஸில் தங்கியிருந்து, அங்கிருந்தே வேலைக்கு போய் வந்தார்.

காதலன்
இந்நிலையில், மகாலட்சுமி ஒருவரை விரும்பினார்.. அவரும் போலீஸ்தான்.. திருநெல்வேலியை சேர்ந்தவர்.. இருவரின் நெருக்கமும் அதிகமானது.. இந்நிலையில், நேற்று முன்தினம், மகாலஷ்மிக்கு போன் செய்துள்ளார் அவரது காதலன்.. செல்போன் ரிங் போகிறது.. ஆனால், எடுக்கவில்லை.

அலறல்
அதனால் திரும்ப திரும்ப போனில் அழைத்து பார்த்தும், பதில் இல்லை என்பதால், சந்தேகமடைந்த அவர் மகாலட்சுமி தங்கியிருந்த குவார்ட்டஸுக்கே சென்று பார்த்தார்.. அப்போதுதான், அந்த குவார்ட்டஸ் வீட்டின் ஜன்னலில் கயிற்றை கட்டி, மகாலட்சுமி சடலமாக கிடந்ததை கண்டு அலறினார்..

ஆஸ்பத்திரி
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் சொல்லப்படவும், அவர்கள் விரைந்து வந்து, மகாலட்சுமியின் சடலத்தை மீட்டனர்.. போஸ்ட் மார்ட்டத்துக்கு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். இதனிடையே, மகாலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் தந்துள்ளனர்..

மகாலட்சுமி
அவர்கள் மகாலட்சுமி பற்றி சொல்லும்போது, "இறந்தது ஒரு பெண் போலீஸ்.. தற்கொலை செய்து கொள்ள கூடியவர் கிடையாது.. தைரியமான பெண்... மகாலஷ்மி ஒருத்தரை காதலித்து வந்தது எங்களுக்கு தெரியும்.. இந்த காதலை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.. ஆனால், அந்த காதலன் வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை.. கல்யாண பேச்சுவார்த்தைகூட பாதியிலேயே நின்றுவிட்டது.. அதனால், மகாலட்சுமி மரணத்தை முறையாக விசாரிக்க வேண்டும் என்று கதறி அழுது கூறுகிறார்கள்.

சந்தேகம்
அதுமட்டுமல்லாமல், ஜன்னலில் தூக்கு போட்டுள்ளதால், மகாலஷ்மி முட்டி போட்டபடியே கிடந்துள்ளார்.. இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.. ஜன்னல் கம்பியில் கயிறு மாட்டி கொண்டு, தரையில் உட்கார்ந்து எப்படி தொங்க முடியும்? என்ற சந்தேகமும் எழுகிறது..

சடலம்
மகாலட்சுமி சடலமாகவே கிடந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.. இந்த வழக்கில், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் எதுவும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. பெண் போலீஸ் ஒருவர், பூட்டிய ரூமுக்குள் பிணமாக கிடந்த சம்பவம் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications