முடிஞ்சா தொட்டு பாரு! மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறும் காளைகள்! கலர் கலர் பரிசுகள்
மதுரை: பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்நிலையில் இன்று அலங்காநல்லூரில் கோலாகலமாய் துவங்கியது.. இந்நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார்.. முதல்வரின் இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், பொங்கல் பண்டிகையின் மூன்று நாட்களிலும் நடந்துவருகின்றன. முதல் நாள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் பிரவீன் ஆகியோர் துவக்கி வைத்தனர்..

பொங்கல் பண்டிகை
நேற்றைய நாள் மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஆரம்பம் காலை 7 மணிக்காக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வர தாமதம் காரணமாக 9 மணிக்கு மட்டுமே தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடந்த இப்போட்டியில் 5,757 காளைகள், 1,913 மாடுபிடி வீரர்கள் கலந்து, தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு களமிறங்கினர். மாடுபிடி வீரர்கள் காளைகளை தீரத்துடன் கட்டி, வெற்றி பெறும் வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.. .
காஸ்ட்லி பரிசுகள்
பங்கேற்ற 10 சுற்றுப் போட்டியில், அஜித் மற்றும் பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் இணைந்தனர். குலுக்கல் முறையில் அஜித் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார் வென்றார், இரண்டாம் இடத்தில் பிரபாகரனுக்கு பைக் வழங்கப்பட்டது, மூன்றாம் இடத்தில் கார்த்திக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கிய பாலமுருகன் கார் வென்றார். சிறந்த காளைகளுக்கும் முதலமைச்சர் மற்றும் சமூக தலைவர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
இதையடுத்து, பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று ஜனவரி 17ம் தேதி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி உள்ளது.. தமிழகம் முழுவதும் இருந்து இந்தப் போட்டியில் பங்கேற்க 6,500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் தரத் தேர்வின் அடிப்படையில் சிறந்த 1,100 காளைகளுக்கு மட்டுமே போட்டியில் பங்கேற்க டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதேபோல், 600-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்த துவங்கி உள்ளனர். .
இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.. அதன் பிறகு ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது...
இந்த போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார்.. இதற்காக தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை வந்தார்.. விமான நிலையத்தில் இருந்து வாடிவாசல் வரை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. இன்றைய தினம் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு, தங்கம், வெள்ளி, கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்..
பல காஸ்ட்லி கண்கவர் பரிசுகள்
இந்தப் பாரம்பரிய போட்டியை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் முன்பதிவு செய்து வருகை தருகின்றனர். தென் மண்டல காவல் துறை ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போட்டியில் அதிக எண்ணிக்கையிலான காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக வழங்கப்படுகிறது. சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் வழங்கப்பட உள்ளது. இரண்டாம் பரிசு பெறும் மாடு பிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் பைக்குகள் பரிசாக வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் காளைகளுக்கும், அவற்றை அடக்கும் வீரர்களுக்கும் ஸ்கூட்டர், பசு கன்று, பீரோ, டிவி, சைக்கிள், தங்க நாணயங்கள், மெத்தை, கட்டில் உள்ளிட்ட ரூ.2 கோடிக்கு மேற்பட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக அதிக காளைகளை அடக்கும் முதல் மூன்று வீரர்களுக்கு முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஸ்டாலின் மதுரை வருகை
மதுரை அலங்காநல்லூரில் இன்று காலை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள்..
உலகப் புகழ்பெற்ற இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நட்சத்திர மாடுபிடி வீரரான அபி சித்தர் பங்கேற்கவுள்ளது ஜல்லிக்கட்டு பார்வையாளர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications