வேறு வேறு ஜாதி.. விரட்டி விரட்டி பேஸ்புக்கில் லவ்ஸ்.. கல்யாணமும் செய்து.. கர்ப்பமுமாக்கிய இளைஞர்!
காதல் கணவன் ஏமாற்றிவிட்டதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார்
மதுரை: பியூட்டி பார்லர் பெண்ணை விரட்டி விரட்டி லவ் பண்ணி.. கல்யாணமும் செய்து.. கர்ப்பமுமாக்கிவிட்டு நைஸாக எஸ்.ஆகிவிட்டார் உதயகுமார் என்ற இளைஞர்!
மதுரை மாவட்டம் மேலூர் தற்காகுடியை சேர்ந்தவர் உதயகுமார்.. இவர் சத்யா என்ற பெண்ணை காதலித்தார்.. சத்யா ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார்.

ஆரம்பத்தில் ஃபேஸ்புக் மூலம்தான் இவர்கள் பழகி உள்ளனர்.. பிறகுதான் காதல் மலர்ந்துள்ளது.. 2 பேரும் வேறு வேறு சாதி.. அதனால் வீட்டில் எப்படியும் ஒத்து கொள்ள மாட்டார்கள் என்பதல், வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டனர்... தனியாக வீடு எடுத்து குடித்தனமும் நடத்தி வந்தனர்.. இப்போது சத்யா கர்ப்பமாக இருக்கிறாராம்.
இந்நிலையில், உதயகுமாரின் அப்பா இவர்களுக்கு போன் செய்து சமாதானம் பேசி உள்ளார்.. ஊரறிய கல்யாணம் செய்து வைப்பதாகவும், அதனால் திருமணம் முறிவு பத்திரம் ஒன்றை எழுதி தந்தால், அதை உறவினர்களிடம் காட்டி கல்யாணம் செய்து வைப்பதாக சத்தியம் செய்தார்.. இதனால் சத்யாவும் அதன்படியே அந்த பத்திரம் எழுதி கையெழுத்து போட்டும் கொடுத்தார். கணவனையும் மாமனாருடன் அனுப்பிவைத்தார்.
அதோடு சரி.. மகனிடம் என்ன பேசினாரோ தெரியாது.. மகனுக்கு இன்னொரு பெண்ணை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.. 60 சவரன் நகை உட்பட சொந்தக்கார பெண்ணுக்கு மகனை கட்டித்தரவும் முடிவு செய்துவிட்டாராம்.. இதை கேள்விப்பட்ட சத்யா, அதிர்ந்து போனார்.. போன் செய்தாலும் கணவர் எடுப்பதில்லையாம்.. அதனால், போலீசுக்கு போனார் சத்யா.
உடனே மாமனார், சத்யா எழுதி கொடுத்த பத்திரத்தை வைத்து நியாயம் பேசினார். இதனால் மேலும் அதிர்ந்த சத்யா, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.. பின்னர் உடனடியாக சத்யாவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அவர் உயிரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி உள்ளனர்.. இந்த விவகாரம் தொடர்பாக உண்மை தன்மை எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை.. தொடர் விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்!
டிக்டாக் ஒழிந்தாலும், அது ஏற்படுத்திவிட்ட பாதிப்பு இன்னும் நம்மை விட்டு போகவே இல்லை!












Click it and Unblock the Notifications