மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவில் பதுங்கிய போதை இளைஞர்! விடிந்ததும் நடந்த ட்விஸ்ட்! என்ன பாருங்க
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு முழுவதும் குடிபோதையில் இளைஞர் ஒருவர் பதுங்கியிருந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்கள், கல்வெட்டுக்கள், கலை பொருட்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்த தலைமுறையினருக்கு பத்திரமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு இருப்பதாலும், கோயிலுக்குள் இருக்கும் ஆபரணங்களை பாதுகாக்கவும் இக்கோயிலுக்கு காவல்துறை பலத்த பாதுகாப்பை வழங்கி வருகிறது.

இக்கோயில் தினமும் காலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணிக்கு அம்மன் சன்னதி வாசலில் உள்ள சித்தி விநாயகர், முருகனுக்கு பூஜை செய்யப்படுகிறது. அதேபோல இரவு 9.15 வரை அம்மனை தரிசிக்க முடியும். அதன் பின்னர் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் இருக்க அனுமதி கிடையாது. மட்டுமல்லாது கோயிலுக்குள் லைட்டர், செல்போன், தீப்பெட்டி, கத்தி போன்ற கூர்மையான பொருட்கள் என ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் கொண்டு செல்ல தடை இருக்கிறது.
இப்படி இருக்கையில் ஓர் இரவு முழுவதும் கோயிலுக்குள் இளைஞர் ஒருவர் தங்கியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்கு கோபுரம் வழியாக நேற்று இரவு சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்ற இளைஞர் மது போதையில் உள்ளே நுழைந்துள்ளார்.
பின்னர் கோவிலுக்குள் உள்ள விபூதி விநாயகர் சிலை அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார். இதனையடுத்து இரவு கோயில் நடை சாத்தப்பட்டு கதவுகள் மூடப்பட்ட நிலையிலும் மதுபோதையில் இருந்த வினோத்தை யாரும் கவனிக்காமல் சென்றுள்ளனர். தெளிந்து அதிகாலை 3 மணிக்கு எழுந்து பார்த்தபொழுது கோயில் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை தொடர்ந்து வினோத் வடக்கு கோபுரம் கதவை தட்டியுள்ளார். கோயில் உள்ளே இருந்து கதவை தட்டும் சத்தம் கேட்ட உடனே போலீசார் கதவை திறந்து அவரை பிடித்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட வினோத் சில ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது அதனை விட்டுவிட்டு பல்வேறு பகுதிகளிலும் மதுபோதையில் சுற்றி திரிவது தெரியவந்தது. இந்நிலையில் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதுபோதையில் சென்று படுத்து உறங்கியதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்று மதுபோதையில் இருந்த நபரை எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தும் அவரின் நடமாட்டம் குறித்தும் கோவிலில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை மீனாட்சியம்மன் கோவில் காவல்துறையினர் ஆய்வு செய்ய தொடங்கினர்.மேலும் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனையடுத்து வினோத்திடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் , தமிழக உளவுத்துறை காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் வினோத் ஒரு மனநோயாளி என்பது தெரிய வந்திருக்கிறது. வீட்டில் சண்டை போட்டுவிட்டு கோவித்துக்கொண்டு அவர் கோயிலுக்குள் வந்திருக்கிறார். எனவே போலீசார் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதேபோல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். மது போதையில் விடிய விடிய கோயிலுக்குள் ஒருவர் தூங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications