ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் நடுரோட்டில் பிணமாக கிடந்த இளைஞர்! மதுரையில் கொடூரம்
மதுரை: மதுரையில் ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் சாலையில் பிணமாக கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றிய ஜெய்ஹிந்தபுரம் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் காதர் மஸ்தான் (30), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவரை நேற்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவரது ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில், ஜீவா நகர் 2ஆவது தெருவில் கிடந்துள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து அங்கு வந்த மதுரை ஜெய்ஹிந்தபுரம் போலீசார், காதர் மஸ்தான் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் காதர் மஸ்தான் அடிக்கடி தொடர்ந்து வீட்டில் உறவினர்களோடு பிரச்சனை செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே காதரின் உறவினர்களே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications