வெறும் 16 வயசுதான்.. சொந்த மகளையே கொடூரமாக கொன்ற தந்தை! தற்கொலை என நடிப்பு வேற! அதிர வைக்கும் காரணம்
இந்தூர்: மகாராஷ்டிர மாநிலத்தில் கொடூர தந்தை ஒருவர் தனது சொந்த மகளையே கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சொந்த மகளையே தந்தை கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. போலீசார் கூட இதை முதலில் தற்கொலை என்றே நினைத்துள்ளனர்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தான், தந்தை மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் இது மிக கொடூரமாக அரங்கேறிய கொலை என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை அடுத்துள்ள கலாம்னா பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நவ.6ஆம் தேதி 16 வயது சிறுமி உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தூக்கில் தொங்கியவாறு இருந்த அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் இதைத் தற்கொலை என்றே போலீசார் நினைத்து உள்ளனர்.

தற்கொலை
பிரேதப் பரிசோதனை முடிவுகளிலும் கூட கொலைக்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்றே வந்துள்ளது. போலீசார் அந்த சிறுமி இருந்த இடத்தை சோதனை செய்துள்ளனர். அதில் தனது மரணத்திற்குத் தனது சித்தி, மாமா, அத்தை மற்றும் தாத்தா- பாட்டி காரணம் என ஐந்து பேரின் பெயரைக் குறிப்பிட்டு உள்ளார். கையெழுத்தை ஆய்வு செய்த போதும், அது அந்த மாணவியின் கையெழுத்து தான் என்பது உறுதியானது.

கொடூரம்
இதனால் அவர்கள் ஐந்து பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் போது அந்த சிறுமியின் தந்தையின் மொபைல் போனை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது தான் போலீசாருக்கு உண்மை தெரிந்து உள்ளது. அதாவது சொந்த மகளையே கொடூரமாகக் கொன்றுவிட்டு, அதைத் தற்கொலை போலக் காட்டி அந்த கொடூர தந்தை நாடகமாகியுள்ளார்.

போலீசார்
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "அந்த நபரின் மொபைலில், சிறுமி தற்கொலை செய்து கொள்வது போல இருக்கும் ஃபோட்டோவை பார்த்தோம். இது குறித்து நாங்கள் கேள்வி கேட்ட போது அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை. பின் கேட்க வேண்டிய விதத்தில் விசாரணை நடத்திய போது, அந்த நபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது குறித்து விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நடந்தது ன்ன
அந்த கொடூர தந்தை தனது உறவினர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் எனச் சொல்லி மகளைத் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதச் சொல்லியுள்ளார். இதைக் காட்டி அவர்களை மிரட்டலாம் என்று கூறி மகளைத் தற்கொலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மொத்தம் 5 உறவினர்களின் பெயரைக் குறிப்பிடச் சொல்லியுள்ளார். உறவினர்களை மிரட்ட ஃபோட்டோ ஒன்று வேண்டும் எனக் கூறி, தூக்கு மாட்டிக் கொள்வது போல நடிக்கச் சொல்லி உள்ளார்.

நம்பிய சிறுமி
தனது தந்தை கூறியதை உண்மை என நம்பிய அந்த 16 வயது சிறுமியும், தூக்கு மாட்டிக் கொள்வது போல நடித்துள்ளார். அதை ஃபோட்டோ எடுத்த அந்த தந்தை திடீரென தனது மகள் நின்றிருந்த சேரை எட்டி உதைத்து உள்ளார். இதனால் அந்த சிறுமி தனது தந்தை மற்றும் சகோதரி முன்னிலையில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் ஒன்றுமே தெரியாதது போலச் சிறுமியின் தந்தை வெளியே சென்றுவிட்டார்.

கைது
அதன் பின்னர் அவரே போலீசாருக்கு ஃபோன் செய்து, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் அளித்துள்ளார். அந்த நபரின் முதல் மனைவி கடந்த 2016இல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டாவது மனைவியும் அவருடன் வாழப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications