காவிரி: உள்ளாடைகளை காண்பித்து கன்னட அமைப்பினர் 'ஆபாச' போராட்டம்-கேஆர்எஸ் அணையை பார்வையிட்ட 'மகாராணி'
மண்டியா: காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து 33-வது நாளாக கன்னட அமைப்புகள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மண்டியாவில் நடந்த போராட்டத்தின் போது கன்னட அமைப்பினர் உள்ளாடைகளை காண்பித்து ஆபாச போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிடக் கூடாது என்பது கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினர் நிலைப்பாடு. காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. இந்த சொற்ப நீரையும் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக மண்டியா மாவட்டத்தில் கன்னட விவசாயிகள், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

மண்டியா ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று 32-வது நாள் போராட்டம் நடைபெற்றது. அப்போது கன்னட அமைப்பினர் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குவிந்தனர். திடீரென தங்களது உள்ளாடைகளை காண்பித்து கன்னட அமைப்பினர் ஆபாச போராட்டம் நடத்தியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மண்டியா விசுவேஸ்ரய்யா சர்க்கிள் பகுதியில் அன்னதானி எம்.எல்.ஏ. (மதச்சார்பற்ற ஜனதா தளம்) தலைமையில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.
இதனிடையே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடிய கிருஷ்ணராஜ சாகர் அணையை மைசூர் மகாராணி பிரமோதாதேவி நேற்று பார்வையிட்டார். 100 ஆண்டுகளுகு முன்னர் மைசூர் மகாராஜா நிதி உதவியுடன் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்பட்டதாலேயே காவிரி நதிநீர் பிரச்சனையும் உருவானது. அதற்கு முன்னர் வரை காவிரி நீர் தங்கு தடையின்றி தமிழ்நாடு வழியாக பாய்ந்து கடலில் கலந்து வந்தது. கிருஷ்ணராஜ சாகர் அணையை பார்வையிட்ட மகாராணி பிரமோதாதேவி, அணையின் நீர் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் காவிரி நதிநீர் பிரச்சனையில் வறட்சி காலத்தில் பங்கீடு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கான இடர்பாடு சூத்திரத்தை உருவாக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார். வறட்சி கால அல்லது இடர்பாடு கால அளவு முறை இன்னமும் உருவாக்கப்படாமல் இருப்பதே காவிரி பிரச்சனை தொடருவதற்கான காரணம் என்பது கர்நாடகாவின் கருத்து.
கேஆர்எஸ் முற்றுகை: காவிரி பிரச்சனையில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வரும் கன்னட சலுவாளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் நாளை கேஆர்எஸ் அணையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளார். பெங்களூரில் இருந்து கேஆர்எஸ் அணையை முற்றுகையிடும் கேஆர்எஸ் சலோ போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகாராஜ் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா!












Click it and Unblock the Notifications