துரத்தும் இனவெறி பயங்கரம்.. ஆஸ்ரேலியாவில் சென்னை ஐஐடி மாணவருக்கு சரமாரி கத்திக்குத்து.. கவலைக்கிடம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் மர்மநபர் ஒருவரால் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
கத்தியால் குத்திய நபரை இதுவரை தாங்கள் பார்த்ததே இல்லை என இந்திய மாணவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றன. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இது இனவெறி தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது.
ஆஸ்ரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியர்களை துரத்தும் இனவெறி தாக்குதல்
சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான வெறுப்பும், இனவெறி தாக்குதலும் அதிகரித்து வருகின்றன. ஒருகாலத்தில், குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்தியர்கள் மீதான இத்தகைய இனவெறி தாக்குதலை பார்க்க முடிந்தது. ஆனால், இப்போது பல நாடுகளில் இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியப் பெண்கள் மீது அமெரிக்க பெண் ஒருவர் இனவெறி கோஷங்களை எழுப்பி தாக்குதல் நடத்தினார். "அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் இந்தியர்கள்தான் இருக்கிறீர்கள்.. திரும்பிச் செல்லுங்கள்" எனக் கூறி அவர் தாக்குதல் நடத்தியது வீடியோவில் பதிவாகி இருந்தது. இதேபோல போலந்து, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் அண்மைக்காலங்களில் நடத்தப்பட்டது.

சென்னை ஐஐடி மாணவர்
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக, ஆஸ்திரேலியாவில் பயங்கர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதுகுறித்த விவரங்கள் வருமாறு: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் ஷுபம் கார்க் (28). சென்னை ஐஐடியில் பி.டெக் முடித்த ஷுபம், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பிஎச்டி படித்து வந்தார். ஆக்ராவில் இருந்து கடந்த மாதம் 1-ம் தேதிதான் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

பாய்ந்து வந்து கத்தியால் குத்திய நபர்..
சிட்னில் தனது பல்கலைக்கழகத்துக்கு சற்று தொலைவில் அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அவருடன் சில இந்திய மாணவர்களும், ஆஸ்திரேலிய மாணவர்களும் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஓடி வந்த நபர், ஷுபமை குறிவைத்து எட்டி உதைத்தார். இதில் நிலைத்தடுமாறு ஷுபம் கீழே விழவே, அவர் மீது பாய்ந்த அந்த நபர், தான் வைத்திருந்த கத்தியால் ஷுபத்தின் முகம், தலை, கழுத்து, இதயம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த அவரது நண்பர்கள், என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள்ளாக அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

11 இடங்களில் கத்திக்குத்து
இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷுபத்தை அவரது நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் உள்ளதாக தெரிவித்தனர். மேலும், அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனவெறி தாக்குதல் - கொலையாளிக்கு வலைவீச்சு
இச்சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இது இனவெறி தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. ஏனெனில், தாக்குதல் நடத்திய நபரை, ஷுபமும், அவரது நண்பர்களும் இதுவரை பார்த்ததே இல்லை. அத்துடன், ஷுபம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஒரு மாதம் மட்டுமே ஆகிறது. அதற்குள் அவருக்கு எதிரிகள் உருவாக வாய்ப்பு இல்லை. எனவே, இந்தியர்கள் மீதான வெறுப்பில் இருந்த ஒருவர்தான், ஷுபம் மீது இந்த தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என போலீஸார் கூறுகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொலையாளியை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தங்கள் மகனை பார்க்க ஷுபத்தின் பெற்றோருக்கு இதுவரை விசா கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இந்திய அரசாங்கம் தங்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications