பட்டென எழுந்து அதிகாரிகள் மீது லஞ்ச புகார் சொன்ன இளைஞர்..உடனே உருவப்பட்ட மைக்! குத்தாலம் அருகே பரபர
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் லஞ்சப் புகார் தெரிவித்தவரிடம் இருந்து மைக் பறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கிளியனூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, திமுக ஒன்றிய செயலாளருமான மங்கை சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பதிலளிக்கும் முன் திமுக ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மைக் மூலம் பதிலளித்தார். இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவதற்கு ரூ.1,200 லஞ்சம் கேட்பதாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் தமிழ் பாண்டியன் என்பவர் புகார் தெரிவித்தார்.
உடனே அவரை மங்கை சங்கர் தடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் தமிழ் பாண்டியன் பேச்சை தொடர்ந்து இருக்கிறார். அப்போது குறிப்பிட்டு பேச்சை நிறுத்த சொன்ன பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மைக்கில் பொதுவெளியில் இப்படி பேசக் கூடாது என்றும், புகார் தெரிவிப்பதற்கான கூட்டம் இதுவல்ல எனவும் கூறி இருக்கிறார். குறைகளை மனுவாக எழுதி கொடுத்தால் நிச்சயமாக விசாரிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இதனையடுத்து அந்த இளைஞரிடம் இருந்து மைக் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டது. பொதுமக்கள் குறைகளை கேட்பதற்காக உள்ள கிராம சபை கூட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய இளைஞரின் மைக் பிடுங்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
