ஓரின சேர்க்கை கொடூரத்திற்கு சிறுவன் பலி : ஆம்பள புள்ளைங்களையும் பத்திரமா பாத்துக்கங்க
ஓரினச் சேர்க்கைக்கு ஒன்பது சிறுவன் பலியான சம்பவம் திருநெல்வேலியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. 19 வயது வாலிபனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருநெல்வேலி: ஆறு வயது சிறுமி முதல் 60 வயது மூத்த பெண்மணிகள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி பலியாகின்றனர். பெண் குழந்தைகளுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. ஓரின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை கொன்று வீசியுள்ளான் ஒரு கொடூரன். பெற்றோர் அளித்த புகாரின் பேரின் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கொலையான சிறுவன் பெயர் கொம்பையா என்பதாகும். ஒன்பது வயதாகும் இந்த சிறுவன் நெல்லை மாவட்டம் தாழையூத்தை அடுத்த குறிச்சி குளத்தை சேர்ந்தவன். டிக் டாக் வீடியோவில் பேசி கிராமம் முழுவதும் கொம்பையா பிரபலமானான்.
ஞாயிறு கிழமை விளையாட போன சிறுவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தாழையூத்து போலீசில் புகார் அளித்து விட்டு உறவினர்கள் வீடுகளில் தேடி வந்தனர்.
காவல்துறையினர் சிறுவன் மாயமானதாக வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது பசுவை தேடி போன ஒருவரின் கண்ணில் முட்புதரில் சிறுவனின் உடல் தென்பட்டது. செவ்வாய்கிழமையன்று குறிச்சிக்குளம் கிராமத்திற்கு அருகே நான்கு வழிச்சாலை அருகே புதரில் இருந்து சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர்.

பாலியல் துன்புறுத்தல்
சிறுவனின் தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயமும், கால்சட்டை இல்லாத நிலையில் அவனது மர்ம உறுப்பில் காயங்களும் தென்பட்டது. பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவனை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

சிறுவனை கொன்றது ஏன்
சிறுவன் ஞாயிறு கிழமையன்று மாயாண்டி என்பவனுடன்தான் விளையாடிக்கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவனை பிடித்து காவல்துறையினர் கேட்ட போது, முதலில் மறுத்தான். தங்கள் பாணியில் விசாரித்த போது, சிறுவனை கொன்றதை ஒப்புக்கொண்டான். மாயாண்டி ஓரினச்சேர்க்கைக்காக சிறுவனை வற்புறுத்தியுள்ளான், அதற்கு சிறுவன் மறுத்துள்ளான்.

சிறுவன் கொலை
கொம்பையா ஓரினச்சேர்க்கைக்கு மறுத்து அழுதுள்ளான். அதோடு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறி விடுவதாகவும் தெரிவிக்கவே, ஆத்திரத்தில் அவனை அடித்து கீழே தள்ளி, தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக மாயாண்டி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

பத்திரமாக பாத்துக்கங்க
காமப்பிசாசுகளிடம் சிக்கி சீரழிவது பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண்பிள்ளைகளும்தான். வீட்டை விட்டு வெளியே விளையாடப்போகும் பிள்ளைகள் சில மணிநேரங்களில் திரும்ப வராவிட்டால் உடனடியாக தேடினால் மட்டுமே பத்திரமாக திரும்ப கிடைப்பார்கள், இல்லாவிட்டால் மாயாண்டி போன்ற காமப்பிசாசுகளின் கைகளில் சிக்கி இரையாகி விடுவார்கள். ஓரினச்சேர்க்கைக்காக கொலை செய்து விட்டு இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான் மாயாண்டி
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications