தோசை மட்டும் இத்தனை வெரைட்டியா? அம்பானி மகன் திருமணத்தில் அசத்திய பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே! வாவ்
மும்பை: மும்பையில் பிரமாண்டமாக நடந்து முடிந்த முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு தென்னிந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. அதில் 5 வகை தோசை உள்பட 11 டிஷ்களை பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே தயாரித்து அசத்திய நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இவரது பெயர் உள்ளது. இவரது மனைவி பெயர் நீடா அம்பானி. இந்த தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார்.

இந்நிலையில் தான் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ராதிகா மெர்ச்சன்ட்டின் தந்தை வீரேன் மருந்து துறை சார்ந்த தொழில்களில் உள்ளார். இதையடுத்து அவர்களின் திருமண விழா கோலாகலமாக நடந்து வந்தது.
கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். அதன்பிறகு மும்பை பிகேசியில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கடந்த 12ம் தேதி நடந்தது.
இதில் பிரதமர் மோடி உள்பட பல அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், வெளிநாட்டு தலைவர்கள் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று புதுமண ஜோடியை வாழ்த்தினர். தமிழகத்தில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், நடிகைகள் நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன், சூர்யா - ஜோதிகா தம்பதி, இயக்குநர் அட்லி - பிரியா தம்பதி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த திருமண விழாவில் இந்திய பாரம்பரிய உணவு வகைகள் முதல் சர்வதேச அளவிலான உணவுகளும் இடம் பெற்று இருந்தன. 2,500 வகையான உணவு வகைகள் விருந்தில் பரிமாறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் 11 வகையான தென்னிந்திய உணவுகளை பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே தயாரித்து வழங்கி உள்ளது.
அதன்படி வெண்ணெய் தோசை, நெய் தோசை, பூண்டு தோசை, பெசாரட்டு தோசை, சாம்பார், தேங்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தட்டே இட்லி, நெய் பனியாரம், ரசம் வடை, போண்டா சூப் என 11 வகையான டிஷ்கரை பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே தயாரித்து விருந்தினர்களுக்கு வழங்கி உள்ளது. இந்த பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் தான் சமீபத்தில் வெடிகுண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications