மகாராஷ்டிரா சட்டசபையில் கடும் அமளி: 12 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அதிரடியாக ஓராண்டுக்கு சஸ்பெண்ட்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) எம்.எல்.ஏக்கள் 12 பேர் ஓராண்டுக்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசை நடத்தி வருகிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்து வருகிறார்.

பாஜக கனவு
இந்த 3 கட்சிகளிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் 3 கட்சிகளில் எந்த கட்சி எப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கவிழ்க்கும் நிலை உள்ளது. இந்த குழப்பத்தை பயன்படுத்தி எப்படியும் ஆட்சி அமைக்கலாம் என்பது பாஜகவின் கனவு.

பாஜக எம்.எல்.ஏக்கள் அமளி
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் விமர்சனங்களை முன்வைத்து இன்று அமளியில் ஈடுபட்டனர். இப்படி அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் எச்சரிக்கை விடுத்துப் பார்த்தார்.

ஓராண்டுக்கு 12 பேர் சஸ்பெண்ட்
ஆனால் பாஜக எம்.எல்.ஏக்கள் இடைவிடாமல் அமளியை தொடர்ந்தனர். இதனையடுத்து சட்டசபையில் ஈடுபட்ட 12 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களை ஓராண்டுக்கு சஸ்பென்ட் செய்வதாக தற்காலிக சபாநாயகர் ஜாதவ் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜகவுக்கு பதிலடி
பிற மாநிலங்களில் பாஜக கையாண்ட இந்த சஸ்பெண்ட் உத்தியை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக மகாராஷ்டிரா சட்டசபை பயன்படுத்தி இருக்கிறது. அதுவும் எப்படியும் ஆட்சி அமைக்கலாம் என கனவு கண்ட பாஜகவுக்கு அதிரடியான பதிலடியாகவும் இது பார்க்கப்படுகிறது.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications