மகாராஷ்டிரா: அமித்ஷா விழாவில் வெயிலால் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு- 123 பேருக்கு சிகிச்சை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில் கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்த 100-க்கும் மேற்பட்டோரில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா (ஷிண்டே பிரிவு)- பாஜக அரசு சார்பாக மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் விழா நவிமும்பை கார்கரில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மிகப் பிரம்மாண்டமான திறந்த வெளி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மகாராஷ்டிராவில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது. பல மணிநேரம் இடைவிடாமல் தொடர்ந்து வெயிலில் பொதுமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் அடுத்தடுத்து பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனர்.
வெயிலின் உக்கிரத்தால் சுருண்டு விழுந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அதிகாலையில் அறிவிக்கப்பட்டது. தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 24 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மருத்துவமனைகளில் மொத்தம் 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்தவர்கள் குடும்பத்துக்கு மகாராஷ்டிரா அரசு ரூ5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில் பங்கேற்றவர்கள் 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications