"தீபா பார்".. பாதாள ரூமின் படுக்கையில் 17 இளம் பெண்கள்.. கிறுகிறுத்து போன போலீசார்.. என்ன நடந்தது?
ரகசிய அறையில் 17 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்
மும்பை: அதல பாதாளத்தில் குளுகுளு ரூமில் இருந்த 17 பெண்களை போலீசார் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மாதம் கர்நாடக மாநிலம் தும்கூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது..
நிறைய தனியார் விடுதிகள் இந்த சாலையில் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு அதிகளவில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

லாட்ஜ்
அதனால் கேத்தசந்திரா போலீஸார் அந்த பகுதியில் உள்ள லாட்ஜ்களில் சோதனையை மேற்கொண்டனர்.. அப்போது நந்தி லாட்ஜ் என்ற லாட்ஜ்ஜையும் சோதனை செய்தனர்.. ஆனால் அந்த லாட்ஜ் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தது.. நிறைய ரூம்கள் இருந்தன.. ஆனால், அவை புதிதாக செட்டிங் செய்யப்பட்டது போல இருந்ததால், சந்தேகம் வந்தது. அந்த ரூமில் ஒரு டேபிள் இருந்தது.. அந்த டேபிளை அகற்றி சுவற்றை தட்டிப்பார்த்தனர்..

சுரங்க அறை
பிறகுதான் அது ஒரு கதவு என்பதும், சுவற்றின் கலரிலேயே பெயின்ட் அடித்து வைத்திருந்தனர். அந்த கதவானது, ஒரு நபர் மட்டுமே உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவில் இருந்ததால், அதிர்ச்சியுற்ற போலீசார், அதை திறந்து பார்த்தனர்.. அப்போது ஒரு சுரங்க அறையை செட்டப் செய்திருந்தது கண்டுபிடித்தனர்.. அந்த சுரங்க ரூமில், 2 பெண்கள் மற்றும் 3 இளைஞர்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.. அவர்களை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்..

தீபா பார்
இதேபோல ஒரு சம்பவம்தான் மும்பையில் நடந்துள்ளது... அந்தேரி பகுதியில் "தீபா பார்" என்ற மதுபானகூடத்தில், பெண்களை கட்டாயப்படுத்தி டான்ஸ் ஆட வைப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த பாருக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.. பாத்ரூம், கிச்சன், ஸ்டோர் ரூம் என எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் அழகிகள் யாருமே அங்கு இல்லை.. இதனால் குழம்பி போன போலீசார், ஒருவேளை தவறான தகவல் தரப்பட்டிருக்கலாம் என்று நினைத்து திரும்பி செல்ல முயன்றனர்..

மேக்கப் ரூம்
அப்போதுதான், அங்கிருந்த மேக் அப் ரூமில் ஒரு பெரிய சைஸ் கண்ணாடி இருப்பதை பார்த்து சந்தேகப்பட்டனர்.. அந்த கண்ணாடியை அப்புறப்படுத்தி பார்க்க முடிவு செய்தனர்... ஆனால் எவ்வளவோ முயற்சித்தும், கண்ணாடியை நகர்த்த முடியவில்லை.. சுவரோடு சுவராக அந்த கண்ணாடியை பொருத்தப்பட்டிருந்தது.. அதனால், வேறு வழியில்லாமல், சுத்தியலால் அதை அடித்து அந்த கண்ணாடியை உடைத்தனர்.. அப்போது அந்த கண்ணாடிக்கு பின்பு, படிக்கட்டுகள் நிறைய இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்..

படிக்கட்டுகள்
அந்த படிக்கட்டில் போலீசார் கீழிறங்கி சென்றபோது, பாதாளத்தில் ஒரு ரகசிய ரூம் இருந்தது கண்டறியப்பட்டது... அங்கு மொத்தம் 17 பெண்கள் இருந்தனர்.. அந்த ரூமில் படுக்கைகள் போடப்பட்டு ஏசி வசதி இருந்தன.. பெண்கள் தங்குவதற்கு தேவையான எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருப்பதை பார்த்து போலீசாரே மிரண்டு விட்டனர்.. அந்த 17 பெண்களும் இந்த பாரில் டான்ஸ் ஆடுபவர்கள்.. இந்த ரூமில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனராம்.. இறுதியில் அனைத்து பெண்களையும் பத்திரமாக மீட்ட போலீசார், 3 பேரை கைது செய்ததுடன், பார் ஊழியர்கள் 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
