கையில் என்ன.. இவ்வளவு கோடியா? மும்பை ஏர்போர்ட்டில் ஹர்திக் பாண்டியாவை வளைத்த கஸ்டம்ஸ்? என்ன நடந்தது
மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இவர் வாங்கிய இரண்டு புதிய வாட்ச்கள்தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
Recommended Video
2021 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை. அதன்பின் நடந்த 2021 டி 20 உலகக் கோப்பை தொடரிலும் ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை.
இவரின் காலில் ஒன்றரை வருடத்திற்கு முன் செய்த ஆபரேஷனுக்கு பின் பவுலிங் போடுவதை நிறுத்திவிட்டார். இதனால் இந்திய அணிக்கும் இவர் பவுலிங் போடுவது கிடையாது.

பேட்டிங்
இவரின் பேட்டிங்கிலும் பார்ம் இல்லை. இதனால் உலகக் கோப்பை தொடரின் போதே ஹர்திக் பாண்டியாவை எடுக்க கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அதையும் மீறி ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து போட்டியிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தும் கூட ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை.

இந்திய அணி வெளியேற்றம்
அதோடு இந்திய அணியும் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக வீழ்ந்தது. இதனால் இந்திய அணி செமி பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி 20, டெஸ்ட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா புறக்கணிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வாய்ப்பு
இந்த நிலையில் மும்பை ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இவரிடம் இரண்டு வாட்ச் இருந்துள்ளது. இரண்டும் புதிய வாட்ச் ஆகும். அதை ஒன்றை கையில் கட்டி இருந்துள்ளார். இன்னொன்று அவரின் கை பையில் இருந்துள்ளது. இதன் இரண்டின் மதிப்பு ரூபாய் 1.5 கோடியாகும்.

அதிகாரிகள்
இதை பார்த்ததும், இவ்வளவு கோடி மதிப்புள்ள பொருட்களை துபாயில் இருந்து வாங்கி வர பில் தேவை. இதன் மதிப்பு மிக அதிகம். பில் எங்கே என்று கேட்டுள்ளனர். ஆனால் ஹர்திக் பாண்டியா தன்னுடைய விளக்கத்தில் சுயமாக சென்று இவர் அதிகாரிகளை சந்தித்து வாட்ச்களை கொடுத்ததாக கூறியுள்ளார். அதே சமயம் ஹர்திக் பாண்டியாவிடம் இதற்கான சில ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கூடுதல் இறக்குமதி வரி கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நடவடிக்கை
இதையடுத்து அவரின் வாட்ச் இரண்டும் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு அவரிடம் தீவிர சோதனை செய்யட்டது. இவர் கூடுதல் இறக்குமதி வரி கட்டி சில ஆவணங்களை கொடுத்த பின் வாட்ச் திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications