மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்டினல் தீவு கொலையும் - 26/11 மும்பை தாக்குதலும்.. இந்தியா கற்க மறந்த பெரிய பாடம்!

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலும் அந்தமானில் சென்டினல் ஆதிவாசிகளால் ஜான் என்ற அமெரிக்கர் கொலை செய்யப்பட்டதற்கும் சில முக்கிய தொடர்புகள் உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாட்டையே அதிர வைத்த மும்பை தாக்குதல் நடைபெற்ற தினம் இன்று

    மும்பை: 2008ம் ஆண்டு 26ம் தேதி 11ம் மாதம் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலும் அந்தமானில் சென்டினல் ஆதிவாசிகளால் ஜான் என்ற அமெரிக்கர் கொலை செய்யப்பட்டதற்கும் சில முக்கிய தொடர்புகள் உள்ளது.

    மும்பையில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றோடு 10 வருடம் ஆகிவிட்டது. மும்பையின் முக்கிய பகுதிகளில் கொடூரமாக 10 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் இன்னும் உறைய வைக்க கூடிய ஒன்றாக உள்ளது.

    இந்த நிலையில்தான் அந்தமானில் அமெரிக்கர் ஒருவர் சென்டினல் தீவில் புகுந்து உயிரை இழந்துள்ளார். ஜான் ஆலன் என்று அமெரிக்கர் சென்டினல் தீவிற்குள் சென்று சென்டினலீஸ் மக்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் முக்கிய ஒற்றுமை இருக்கிறது.

    26/11.. இந்தியக் கடலோரம் முன்பை விட பாதுகாப்பாக மாறியுள்ளது.. கடற்படை தளபதி 26/11.. இந்தியக் கடலோரம் முன்பை விட பாதுகாப்பாக மாறியுள்ளது.. கடற்படை தளபதி

    இரண்டிலும் ஊடுருவல்

    இரண்டிலும் ஊடுருவல்

    இந்த இரண்டிலும் வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் இந்தியாவிற்குள்ளோ, அதன் ஏதோ ஒரு பகுதிக்குள்ளோ அத்து மீறி நுழைந்து இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். முக்கியமாக மும்பை தாக்குதலில் கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் போலவேதான் ஜானும் கடல் வழியாக வந்துள்ளார். இரண்டிலும் கடலோர பாதுகாப்பு படை மிக மோசமாக பாதுகாப்பு கொடுத்தது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    தொடர்பு

    தொடர்பு

    இரண்டிலும் மீனவர்கள்தான் எதோ வகையில் பலிக்கடா ஆகியுள்ளார். பணத்திற்கு ஆசைகாட்டி ஜான் மீனவர்களை அழைத்து சென்டினல் தீவிற்கு சென்று இருக்கிறார். இன்னொருபுறம் மும்பையில் மீனவர்களை கொன்றுவிட்டு அவர்கள் படகுகளை எடுத்துக் கொண்டுதான் அஜ்மல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் ஊருக்குள் வந்தனர்.

    பாதுகாப்பில் மாற்றம் இல்லை

    பாதுகாப்பில் மாற்றம் இல்லை

    இரண்டிலும் இந்தியாவின் பாதுகாப்பு துறை மிக மோசமாக செயல்பட்டது கண்கூடாக தெரிகிறது. வெளிநாட்டு நபர்களை மிக எளிதாக ஊருக்குள் விட்டுவிட்டு பிரச்சனை நடந்த பின், அதை பற்றி யோசித்து இருக்கிறோம். 10 வருடமாகி இன்னும் கூட இந்த விஷயத்தில் இந்தியாவில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்று இந்த அந்தமான் சம்பவம் உணர்த்துகிறது.

    அவமானம்

    அவமானம்

    இரண்டு சம்பவங்களும் இந்தியாவிற்கு பெரிய அவமானத்தை தேடித்தந்தது. முக்கியமாக வெளிநாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த பெரிய கேள்வி எழுந்தது. மும்பை தாக்குதலில் வெளிநாட்டினர் பெரிய அளவில் பலியாகினர். இந்த அந்தமான் சம்பவமும் அமெரிக்காவில் இந்தியாவின் மதிப்பை பெரிய அளவில் வீழ்த்தி உள்ளது.

    English summary
    26/11 and Andaman American murder : Story of two security breach
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X