பாரில் உறவு.. ரூமில் சடலம்.. விழுந்து கிடந்த வோட்கா பாட்டில்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம்
மும்பை: "பாரில்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.. இதையே சாக்காக வைத்து பணம் கறந்து கொண்டே இருந்தார்.. ஒரு கட்டத்தில் என் மனைவியிடம் சொல்லிவிடுவதாக மிரட்டினார்.. அந்த ஆத்திரத்தில்தான் கொன்றுவிட்டேன்" என்று பெண்ணை தலைகாணி வைத்து அமுக்கி கொன்ற நபர் வாக்குமூலம் தந்துள்ளார்.
மும்பை மாநகரத்தில் வசித்து வந்தவர் ரோசினா என்ற பெண்.. இவருக்கு வயது 33... போன டிசம்பர் 29-ம் தேதி இவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.. தன்னுடைய அறையிலேயே சடலமாக கிடந்த இவரை யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.
அதனால், போலீசார் விரைந்த வந்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் இருந்த பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு நபர் சிக்கினார்.. ஆனால் அவரிடம் நடத்திய விசாரணையில் போதிய தகவல்கள், ஆதாரங்கள் எதுவுமே கிடைக்கவில்லை.. அதனால் அவரை விடுவித்து விட்டனர்.

போஸ்ட் மார்ட்டம்
இந்த சமயத்தில்தான், ரோசினாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. ஆனால், அதிலும் ரோசினாவை கொலை செய்யப்பட்டதற்கு எந்த ஒரு துப்பும் ஆதாரமும் கிடைக்கவில்லை.. அதனால் திணறிய போலீசார் திரும்பவும் ரோசினா சடலமாக கிடந்த அறைக்குள்ளேயே சோதனை செய்தனர்.

மதுபாட்டில்
அப்போது அங்கே ஒரு மதுபாட்டில் விழுந்து கிடந்தது.. அந்த ஒரு பாட்டிலை தவிர வேறு எதுவுமே அறையில் கிடைக்கவில்லை. .அதனால், அந்த பாட்டிலை எடுத்துகொண்டு, மதுபானம் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சென்று விசாரித்தனர்.. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

ஒயின் ஷாப்
அப்போதுதான், ஏற்கனவே போதிய ஆதாரம் இல்லாமல் விடுவிக்கப்பட்ட, அதே நபர் ஒயின்ஷாப்பிற்கு வந்து செல்வது பதிவாகி இருந்தது. அதனால் திரும்பவும் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பல திடுக் தகவல்கள் வெளியாயின.

மிரட்டல்
அவர் பெயர் ஸ்வாபன்தாஸ்.. கொல்கத்தாவை சேர்ந்தவர்.. ரோசினாவுடன் ஒரு பாரில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. நாளடைவில் தகாத உறவும் ஆரம்பமாகி உள்ளது.. இவரிடமிருந்து ரோசினா இதையே சாக்காக வைத்து பணம் கறக்க ஆரம்பித்துள்ளார்.. ஆரம்பத்தில் கேட்ட பணத்தை தந்துவந்த ஸ்வாபன்தாஸ், நாளடைவில் பணம் தருவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது.

வாக்குமூலம்
இதனால் கடுப்பான ரோசினா, கள்ளஉறவு அவரது மனைவியிடம் சொல்லிவிடுவதாக மிரட்டி உள்ளார்.. இந்த ஆத்திரத்தில்தான் ஸ்வாபன்தாஸ் சம்பவத்தன்று ரோசினா அறைக்கு சென்று, தலைகாணியை முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார்.. இந்த வாக்குமூலத்தை அடுத்து ஸ்வாபன்தாஸை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications