"பார்முலாவை" கண்டுபிடித்த இந்தியா.. பாண்டியாவின் புது டெக்னிக்! மேட்சில் வென்றது எப்படி? 5 காரணங்கள்
மும்பை: இலங்கைக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன. இந்திய அணி எப்போதும் ஆடும் தனது பார்முலாவை மாற்றிவிட்டு இன்று புதிய முறையில் ஆடியது குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்தியா - இலங்கைக்கு எதிராக டி 20 தொடரின் முதல் ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 162-5 ரன்கள் எடுத்தது. முதல் ஓவரிலேயே இஷான் கிஷான் அதிரடி காட்டினாலும், அடுத்தடுத்த ஓவர்களில் இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் அவுட் ஆனார்கள்.
கில் 7 ரன்களுக்கும், சூரியகுமார் யாதவ் 7 ரன்களுக்கும், சஞ்சு சாம்சன் 5 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள்.

திரில் வெற்றி
பாண்டியா, இஷான் இருவர் மட்டும் கொஞ்சம் நிலைத்து ஆடினார்கள். பாண்டியா 29, இஷான் 37 ரன்கள் எடுத்தனர். நொடிந்து இருந்த இந்திய அணியை இரண்டு ஆல் ரவுண்டர்.. அக்சர் பட்டேல், ஹூடா இருவரும்தான் காப்பாற்றினார்கள். 23 பந்தில் 41 ரன்களை ஹூடா எடுத்தார். இவர் மட்டும் 4 சிக்ஸ் அடித்தார். இன்னொரு பக்கம் அக்சர் பட்டேல் 20 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். அதன்பின் இறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக இழந்து வந்தது. இருந்தாலும் கேப்டன் தசுன் ஷனாகா 45 ரன்கள் எடுக்க ஆட்டம் கடைசி ஓவரில் கடைசி பந்தில் 4 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு சென்றது. கடைசி பந்தில் 1 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தது. இதனால் இந்தியா கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.

காரணம் 1 - கேப்டன் கூல்
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் கேப்டன் ஹர்திக் பாண்டியா. தோனிக்கு பின்பாக களத்தில் மிகவும் கூலாக இருந்த கேப்டன் என்றால் அது ஹர்திக் பாண்டியாதான். முக்கியமாக 19வது ஓவரில் ஹர்ஷல் பட்டேல் அடுத்தடுத்து நோ பால், சிக்ஸ் என்று ரன்களை கொடுத்தார். இதனால் ஆட்டம் டென்ஷானாக சென்றது. இதே போன்ற சமயங்களில் முன்பெல்லாம் ரோஹித் சர்மா பெரும் பதற்றம் அடைவார். ஆனால் நேற்று ஹர்திக் பாண்டியா பெரிதாக டென்சன் ஆகாமல் கூலாக இருந்தார்.

காரணம் 2- வீரர்களுக்கு சுதந்திரம்
அதேபோல் வீரர்களுக்கும் தொடக்கத்தில் இருந்தே பாண்டியா சுதந்திரம் கொடுத்தார். பேட்ஸ்மேன்கள் சென்று அதிரடியாக ஆடலாம். ஆனாலும் முதலில் சில பந்துகளில் ஸ்லோவாக ஆடுங்கள். அவுட் ஆகிவிடுவோம் என்ற கவலை வேண்டாம் என்று சொல்லித்தான் வீரர்களை ஹர்திக் பாண்டியா அனுப்பி வைத்து இருக்கிறார். இது வீரர்களிடம் நேற்று நன்றாகவே தெரிந்தது. எல்லோரும் இளம் வீரர்கள், ஹர்திக் பாண்டியாவும் இளம் வீரர் என்பதால் அணியில் வீரரக்ள் கூடுதல் சுதந்திரத்துடன் இருந்தது தெரிய வந்தது. 2011 உலகக் கோப்பை அணியில் தோனிக்கு கீழ் அணியில் எல்லா வீரர்களும் முடிவு எடுக்கும் திறனுடன் இருந்தனர். அதேபோலத்தான் நேற்றும் வீரர்கள் சுதந்திரமாக இருந்தனர்.

காரணம் 3- அக்சர் பட்டேல் ரிஸ்க்
கடைசி ஓவரில் அக்சர் பட்டேலை பவுலிங் செய்ய வைத்தது பாண்டியாவின் திறமை என்றுதான் கூற வேண்டும். அக்சர் பட்டேல் ரன்னை கட்டுப்படுத்துவார் என்பதை உணர்ந்தே இந்த ரிஸ்க்கை ஹர்திக் பாண்டியா எடுத்தார். சமயங்களில் அஸ்வினை இப்படி கடைசி ஓவர் போட வைத்து இருக்கிறார் தோனி. தோனியிடம் பாடம் கற்றதால் என்னவோ ஹர்திக் பாண்டியாவும் அதேபோல் செயல்பட்டார். தீக்சன, ரஜித்தா இருவரும் பெரிதாக ஸ்பின் பவுலர்களை ஆட மாட்டார்கள் என்பதால் அக்சர் பட்டேலை இறக்கி ஹர்திக் பாண்டியா ரிஸ்க் எடுத்தார்.

காரணம் 4 - பவுலிங் ரொட்டேஷன், பீல்டிங்
நேற்று ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் ரொட்டேஷன் சிறப்பாக இருந்தது. அதேபோல் அவர் கடைசி 5 ஓவர்களில் பீல்டிங் நிற்க வைத்தது, கடைசி ஓவரில் பீல்டிங் மூலமே இரண்டு விக்கெட் எடுத்து ஆட்டத்தை வென்றது என்று அவரின் பீல்டிங் செட்டப் கன் மாதிரி இருந்தது. அதேபோல் பவுலர்களும் நேற்று சிறப்பாக செயல்ப்ட்டனர். 155 கிமீ வேகத்தில் உம்ரான் மாலிக் பவுலிங் செய்தார். இந்த பந்தில் அவர் விக்கெட்டும் எடுத்தார். இதுதான் இந்திய பவுலர் வீசிய மிக அதிக வேகமான பந்து ஆகும். அதேபோல் இன்னொரு இளம் பவுலரான மாவியும் நேற்று சிறப்பாக பவர் பிளே பவுலிங்கை செய்து இருந்தார்.

காரணம் 5 - அச்சமில்லை
முக்கியமாக நேற்று இந்திய அணியில் வீரர்கள் யாரும் பெரிதாக நடுங்கி ஒடுங்கவில்லை. கோலி, ரோஹித் கேப்டன்சிக்கு கீழ் இந்திய வீரர்கள் டி 20 போட்டிகளில் அச்சத்துடன் ஆடுவார்கள். அக்ரஸிவ் ஆட்டம் ஆடாமல் டிபன்சிவ் ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தனர். எங்கே காலில் அடி விழுந்துவிடுமோ என்பது போலவே பயத்துடன் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால் நேற்று நடந்த ஆட்டத்தில் விக்கெட்டுகள் போன போதும் கூட வீரர்கள் பெரிதாக டிபன்ஸ் செய்யவில்லை. டாப் ஆர்டர் சரிந்து அதன்பின் இறங்கிய டெயில் எண்டர் கூட பெரிதாக அச்சமின்றி அடித்து ஆடினார்கள். இந்திய அணியின் இந்த புது பார்முலா கண்டிப்பாக வரும் நாட்களில் வீரர்களுக்கு பெரிதாக உதவும் என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications