80 வயது தாத்தாவுக்கு பெண் அனுப்பிய பிரண்ட் ரெக்வஸ்ட்! அடுத்து மாயமான 9 கோடி.. இந்த தப்பை செய்யாதீங்க
மும்பை: 80 வயதான முதியவர் ஒருவருக்கு பேஸ்புக்கில் பெண் கணக்கில் இருந்து பிரண்ட் ரெக்வஸ்ட் வந்துள்ளது. அந்த பிரண்ட் ரெக்வஸ்ட்டை அந்த முதியவர் ஏற்ற நிலையில், அதன் பிறகு சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பல பகீர் திருப்பங்கள் நடந்துள்ளது. அந்த முதியவர் மொத்தம் ரூ.9 கோடியை இந்த சைபர் மோசடியில் இழந்தது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலகட்டத்தில் சைபர் மோசடிகள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக வயதானோரைக் குறிவைத்தே இதுபோன்ற சைபர் மோசடிகள் அதிகம் நடக்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் மும்பையில் நடந்துள்ளது. மும்பையில் 80 வயது முதியவர் ஒருவர், சைப்ரக்ரைம் கும்பலிடம் ₹9 கோடிக்கு மேல் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகள் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. அந்த முதியவரிடம் இருந்து ஆசை வார்த்தைகள் கூறி 734 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் 9 கோடி ரூபாயை இந்த கும்பல் மோசடி செய்துள்ளது.
சைபர் மோசடி
இது எல்லாம் கடந்த 2023ம் ஆண்டு தான் தொடங்கியுள்ளது. 2023 ஏப்ரல் மாதம் அந்த முதியவர் ஃபேஸ்புக்கில் ஷார்வி என்ற பெண்ணுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். இருவருக்கும் முன்பின் தெரியாதாம். இருந்தாலும் அந்த பெண்ணுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார். ஆனால், அந்த பிரண்ட் ரெக்வஸ்ட் முதலில் ஏற்கப்படவில்லை.
பணம் பறிப்பு
அதன் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து ஷார்வி கணக்கில் இருந்தே அந்த முதியவருக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் வந்துள்ளது. அதை அவர் ஏற்றுள்ளார். இருவரும் முதலில் பேஸ்புக் தளத்தில் பேச ஆரம்பித்துள்ளனர். முதலில் இருவரும் பேஸ்புக்கில் சாட் செய்த நிலையில், பிறகு நம்பரையும் மாற்றிக் கொண்டனர்.. பிறகு இருவரும் வாட்ஸ்அப்பில் சாட் செய்துள்ளார். கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பிள்ளைகளுடன் வசிப்பதாகவும் ஷார்வி அந்த முதியவரிடம் தெரிவித்தார். நாளடைவில், தனது குழந்தைகள் உடல்நலமில்லாமல் இருப்பதாகக் கூறி, பணம் கேட்கத் தொடங்கினார்.
அடுத்த பெண்
இது ஒரு பக்கம் இருக்க சில நாட்களில் கவிதா என்ற மற்றொரு பெண் முதியவருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பத் தொடங்கினார். தான் ஷார்விக்கு தெரிந்தவர் என்றும் பிரண்டாக இருக்க விரும்புவதாகச் சொல்லி அந்த தாத்தாவுக்கு மெசேஜ் செய்திருக்கிறார். சீக்கிரமே அந்த முதியவருக்கு ஆபாசமான மெசேஞ்களை அனுப்பி, அந்த இரண்டாவது பெண் பணம் கேட்கத் தொடங்கினார்.
அதே ஆண்டு டிசம்பரில், ஷார்வியின் சகோதரி என்று கூறி தினாஸ் என்ற பெண் முதியவரிடம் இருந்து பணம் கேட்டார். ஷார்வி இறந்துவிட்டதாகவும், மருத்துவமனை பில்களை கட்ட பணம் வேண்டும் என முதியவரிடம் தினாஸ் கேட்டுள்ளார். ஆதாரமாக ஷார்வி மற்றும் முதியவருக்கு இடையே நடந்த வாட்ஸ்அப் சாட்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் அனுப்பியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த பெண்ணுக்கும் பணம் அனுப்பியுள்ளார்.
மிரட்டல்
சில காலம் கழித்து அந்த முதியவர் தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, தினாஸ் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். ஆனால், இத்தோடு இந்த மோசடி முடியவில்லை. சீக்கிரமே ஜாஸ்மின் என்ற பெண் தினாஸின் தோழி என்று கூறி, மெசேஜ் செய்துள்ளார். அவசரம் எனச் சொல்லி உதவி கோரினார். முதியவர் அவருக்கும் பணம் அனுப்பியிருக்கிறார்.
இப்படி ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2025 வரை, முதியவர் மொத்தம் 734 முறை பணம் அனுப்பியிருக்கிறார். மொத்தம் ₹8.7 கோடியை அவர் அனுப்பியிருக்கிறார்.. தனது சேமிப்பு அனைத்தையும் இழந்த பிறகும், அவர் தனது மருமகளிடமிருந்து ₹2 லட்சம் கடன் வாங்கி அந்த பெண்ணுக்குப் பணம் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகும் கூட அவர்கள் பணத்தைக் கேட்டுக் கொண்டே இருந்ததால் தனது மகனிடம் ₹5 லட்சம் கேட்டார்.
போலீசில் புகார்
தனது அப்பா இவ்வளவு பெரிய தொகையைக் கேட்க மாட்டாரே எனச் சந்தேகமடைந்த மகன், தனது தந்தையிடம் விசாரித்துள்ளார். அப்போது தான் என்ன நடந்தது என்பது தெரியவந்தது. தான் ஒரு சைபர் மோசடியில் சிக்கியுள்ளதை உணர்ந்த முதியவர் அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டிமென்ஷியா (மறதி நோய்) இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஜூலை 22ம் தேதி இது தொடர்பான சைபர் மோசடி புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் தற்போது இந்த மோசடி குறித்து விசாரித்து வருகின்றனர். நான்கு பெண்களும் ஒரே நபராக இருக்கலாம் என்றும், ஒருவரே இதுபோல வேறு வேறு பெயரைச் சொல்லி முதியவரை ஏமாற்றியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications