25 ஆண்டுகளாக வளர்த்த பாம்பு இப்போது எங்களையே கடிக்கிறது.. பாஜகவை போட்டு தாக்கும் உத்தவ் தாக்ரே
மும்பை: ‛‛25 ஆண்டுகளாக வளர்த்த பாம்பு, இப்போது எங்களை கடிக்கிறது'' என பாஜகவை, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. உத்தவ் தாக்கரே முதல் அமைச்சராக உள்ளார்.
மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்தித்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து அந்த மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்து இருந்தது.

கூட்டணி மாற்றம்
இந்நிலையில் கடந்த 2019 தேர்தலில் சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. சிவசேனா கட்சி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து சிவசேனா, பாஜக இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருகட்சி தலைவர்களும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் மத்திய பாஜகவுக்கு எதிராக 3ம் அணி அமைக்க முயற்சிக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை மும்பைக்கு அழைத்து உத்தவ்தாக்கரே லஞ்ச் கொடுத்தார். அப்போதும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் தெரிவித்தார்.

ஆலோசனை
இந்நிலையில் மகாராஷ்டிராவில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக மும்பையில் எம்எல்ஏக்களுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உடனிருந்தார். ஆலோசனையின்போது ‛‛பட்ஜெட் கூட்டத்தொடரில் 100 சதவீதம் எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும்'' என உத்தவ் தாக்கரே கூறினார்.

வளர்த்த பாம்பு கடிக்கிறது
மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டது குறித்தும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்கள் ஆலோசித்துள்ளனர். அப்போது, பாஜகவை உத்தவ்தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, ‛‛25 ஆண்டுகளாக நாங்கள் பாலூட்டி வளர்த்த பாம்பு, தற்போது எங்களை கடிக்கிறது. இந்த பாம்பை எப்படி நசுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்'' என கூறியுள்ளார்.

பழிவாங்கும் அரசு
சரத் பவார் பேசுகையில், ‛‛மத்தியில் இத்தகைய பழிவாங்கும் அரசை நான் பார்த்தது இல்லை. நவாப் மாலிக் கைதுக்கு பின்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். அப்போது அவரது கட்சியை சேர்ந்த நால்வரும் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும் மத்திய பாஜகவை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications