பாலிவுட் பேரழகி மாதுரி தீட்சித் .. ‘பேராசை’ கனவில் மிதந்த பாஜக.. இப்படி சொல்லியா அதிர்ச்சி தருவது?

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் பாஜகவில் இணையப் போகிறார்; லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போகிறார் என தீயாக பரவிய தகவல்கள் அனைத்தும் வதந்தி என திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாம் ஒரு போதும் பாஜகவில் இணையப் போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார் நடிகை மாதுரி தீட்சித்.

மத்தியில் ஆளும் பாஜக, பிரபலங்களை வளைத்துப் போட்டு தேர்தலில் களமிறக்குவதை வியூகமாக வைத்திருக்கிறது. இந்த பட்டியலில் இப்போது பேசப்படுகிறவராக இணைந்திருக்கிறார் நடிகை மாதுரி தீட்சித்.

Actor Madhuri Dixit to join BJP? Contesting Lok Sabha Elections?

நடிகை மாதுரி தீட்சித் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவாரையும் சந்தித்திருந்தார். மும்பையில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது நடிகர் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென நடிகை மாதுரி தீட்சித் பாஜகவில் இன்று இணையப் போகிறார் என தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தன. அத்துடன் லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக வேட்பாளராகவும் மாதுரி தீட்சித் களமிறங்குவார் எனவும் தகவல்கள் நேற்று முதல் காட்டு தீயாக பரவியது. இதனால் பாஜக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால் மாதுரி தீட்சித்தும் அவரது தரப்பும் இந்த தகவல்களை திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். தாம் ஒரு போதும் பாஜகவில் இணையப் போவது இல்லை; லோக்சபா தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் போட்டியிடவும் போவதில்லை என மாதுரி தீட்சித் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் மாதுரி தீட்சித் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்திருக்கிறார். இதனால் மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடுவார் என்றெல்லாம் கூட செய்திகள் பரவி இருந்தன. தற்போதும் அதே போல மாதுரி தீட்சித் பாஜகவில் இணைகிறார் என தகவல்கள் பறந்தன. ஆனால் மாதுரி தீட்சித் திட்டவட்டமாக மறுத்திருப்பது எதிர்பார்ப்பில் இருந்த பாஜகவினரை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாம்.

ஏற்கனவே தெலுங்கானாவில் பாஜகவில் இருந்து நடிகை விஜயசாந்தி விலகிவிட்டார். தமிழ்நாட்டில் நடிகை கவுதமி விலகி இருந்தார். தெலுங்கானாவில் பாஜகவில் இருந்து விலகிய விஜயசாந்தி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறார். இந்த பின்னணியில் மாதுரி தீட்சித், பாஜக பக்கமே போகப் போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+