ஏதோ ஒரு படத்தில் ராணி லட்சுமி பாயாக நடித்து விட்டால்.. அந்த கேரக்டராகவே மாறிவிடுவதா.. பிரகாஷ் ராஜ்
மும்பை: கங்கனா ரனாவத் படத்தில் ராணி லட்சுமி பாயாக நடித்து விட்டால் உடனே அவர் அந்த கதாபாத்திரமாக தன்னை நினைத்துக் கொள்வதா என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிவசேனா அரசு சரியான திசையில் விசாரணையை கொண்டு செல்லவில்லை என கங்கனா குற்றம்சாட்டியிருந்தார்.
இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மும்பையில் கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தின் ஒரு பகுதி விதிமீறி கட்டியதாக கூறி மும்பை மாநகராட்சி அக்கட்டடத்தை இடித்தது. இதற்கு பின்புலத்தில் சிவசேனா இருப்பதாக கங்கனா குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு
அத்துடன் மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிவசேனா நிர்வாகிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மத்திய அரசிடம் பாதுகாப்பு கோரினார். அதன்படி அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவர் சண்டீகர் விமான நிலையத்திற்கு வந்த போது துப்பாக்கி ஏந்திய போலீஸாருக்கு மத்தியில் ராணி போல் வந்த காட்சிகள் வைரலாகின.
|
பாதுகாப்பு ஏற்பாடுகள்
கங்கனாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலர் விமர்சித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில் ஒரு படத்தில் ராணி லட்சுமி பாயாக நடித்து விட்டதால் கங்கனா ரனாவத் தன்னை அந்த கதாபாத்திரமாகவே நினைத்துவிட்டால், அப்ப பத்மாவதியாக நடித்த தீபிகா, அக்பராக நடித்த ரித்திக் ரோஷன், அசோகாவாக நடித்த ஷாரூக், பகத் சிங்காக நடித்த அஜய், மங்கள் பாண்டேவாக நடித்த அமீர் கான், மோடியாக நடித்த விவேக் ஓபராய் இவர்கள் எல்லாம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரகாஷ் ராஜை விமர்சித்த
இதற்கு கங்கனாவின் ரசிகர் ஒருவர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்துள்ளார். ரசிகர் ஒருவர் பதிலளிக்கையில் மதிப்புக்குரிய பிரகாஷ் ராஜ் அவர்களே கங்கனா தனது சொத்தை இழந்துவிட்டார். கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை இழந்துவிட்டார்.

தனிப்பட்ட முறையில்
திரைப்பட கதாபாத்திரங்களுடன் ஒப்பீடு செய்ய உங்களுக்கு எளிதாக இருக்கிறது. ஆனால் உங்கள் வீட்டை இது போல் இடித்தால் என்ன செய்வீர் என கேட்டுள்ளார். இது போல் மற்றொரு ரசிகர் ஒருவர் கேட்கையில் சார் தனிப்பட்ட முறையில் நீங்கள் உண்மையான மனிதர் என நினைத்துக் கொண்டுள்ளேன்.

கங்கனா ரசிகர்
உங்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். ஆனால் கங்கனாவை விமர்சித்த விவகாரத்தில் அது நடக்காது. அவர் வீட்டை இழந்துள்ளார், அலுவலகத்தை இழந்துள்ளார். இந்த கொரோனா தொற்று காலத்தில் எத்தனை பேர் பணியை இழந்துள்ளார்கள் என்பதை யோசித்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications