அஜித் பவார் தேசியவாத கட்சியில் இணைந்த சினிமா பாரதியார் ஷாயாஜி ஷிண்டே.. மகாராஷ்டிரா தேர்தலில் போட்டி?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் திரைப்படங்களில் மகாகவி பாரதியாராக, அரசியல்வாதியாக நடித்த நடிகர் ஷாயாஜி ஷிண்டே, அஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஷாயாஜி ஷிண்டே போட்டியிடுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழில் பாரதியார் திரைப்படத்தில் பாரதியாராக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாயாஜி ஷிண்டே. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் அரசியல்வாதியாக, குணசித்திர நடிகராக பல்வேறு முகம் காட்டி நடிப்பைக் கொட்டியவர் ஷாயாஜி ஷிண்டே.

பொதுவாக மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் போதும், லோக்சபா தேர்தலின் போதும் நடிகர்கள் அரசியல் கட்சிகளைத் தொடங்குவதும் கட்சிகளில் இணைவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து தமிழ்நாட்டில் நடிகர் விஜய் கட்சியைத் தொடங்கி இருக்கிறார்.
இந்த வரிசையில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் நடிகர் ஷாயாஜி ஷிண்டே நிஜ அரசியல்வாதியாகிவிட்டார். மும்பையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் தம்மை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஷாயாஜி ஷிண்டே இணைத்துக் கொண்டார்.
அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, பாஜக, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை மற்றும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தீவிரப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் அஜித்பவார் கட்சிக்கு குறைவான தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் நிலை இருக்கிறது.
இந்த நிலையில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸில் நடிகர் ஷாயாஜி ஷிண்டே இணைந்திருக்கிறார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஷாயாஜி ஷிண்டே வேட்பாளராக களம் இறங்கவும் வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு பகுதி மாவட்டமான சதாராவில் பிறந்த ஷாயாஜி ஷிண்டே மராத்திய மொழி நடிகராக அறிமுகமானார். 1999-ல் Shool இந்தி மொழி திரைப்படத்தில் வில்லனாக நடித்தது பெருமளவு பேசப்பட்டது. இதன் பின்னரே தென்னிந்திய மொழிகள், குஜராத்தி மற்றும் போஜ்புரி மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்தார் ஷாயாஜி ஷிண்டே.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications