கடைசி இடம் பெயர்ந்த தொழிலாளி வீட்டுக்கு செல்லும் வரை உதவுவேன்.. சோனு சூட் பேட்டி
மும்பை: கடைசி இடம் பெயர்ந்த தொழிலாளி தனது வீட்டை அடையும் வரை நான் அவர்களுக்கு உதவிக்கொண்டே இருப்பேன் என்று நடிகர் சோனு சூட், மகாராஷ்டிரா முதல்வரை சந்தித்து பேசிய பின் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் பரிதவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த செலவில் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட். இதனால் மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த தமிழர்கள் அவரை தற்போது ஹீரோவாக பார்க்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் சோனு சூட்டுவை நீங்க நல்லாயிருக்கனும் தம்பி என வாழ்த்தாத தமிழ் தாய்மார்களே இல்லை. அவ்வளவு பேருக்கு உதவி செய்திருக்கிறார் சோனு சூட். பல மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேரை சொந்த செலவில் அவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் சோனு. இன்னும் 70 ஆயிரம் பேரை அனுப்பி வைக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் சோனு சூட்டிற்கு புகழ் கூடிக்கொண்ட செல்வதால், சிவசேனாவின் சஞ்சய் ராவத் எரிச்சல் அடைந்துள்ளார். சோனுவை விமர்சித்து சிவசேனாவின் பத்திரிக்கையான சாம்னாவில் தலையங்கம் எழுதியிருக்கிறார். இதனால் ஆளும் சிவசேனா இவருக்கு எதிராக திரும்பிவிட்டதா என்ற பரபரப்பு எழுந்தது. இதற்கிடையில் சோனுவுக்கு பாஜக முழு ஆதரவு அளித்தது. இதனால் அவர் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் பரவின. ஆனால் இதனை சோனு திட்டவட்டமாக மறுத்தார்.
இதற்கிடையே சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சோனு சூட்டுவை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது சோனு சூட் உடன் உத்தவ் தாக்கரேவின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவும் இருந்தார்.
முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த சோனு சூட், "கடைசி இடம் பெயர்ந்த தொழிலாளி தனது வீட்டை அடையும் வரை நான் அவர்களுக்கு உதவிக்கொண்டே இருப்பேன் காஷ்மர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கட்சிகளும் எனக்கு ஆதரவு அளித்துள்ளன.ஆதரித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications