பரபரப்பு.. சென்னை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்.. மார்க் ஆண்டனி லஞ்சம் விவகாரம்!
மும்பை: மார்க் ஆண்டனி படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து நடிகர் விஷால் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இது நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை இந்தி மொழியில் வெளியிட மும்பை சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது.

அப்போது ரூ 6.5 லட்சம் கொடுக்குமாறு இடைத்தரகர் மூலம் சென்சார் அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: மார்க் ஆண்டனி படத்தை பார்க்கவே மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ 3 லட்சம் கேட்டதாகவும் சான்றிதழை வழங்க ரூ 3.5 லட்சம் கேட்டனர்.
மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ 6.5 லட்சம் பணத்தை இரு தவணைகளாக கொடுத்து மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட்டேன் என நடிகர் விஷால் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களையும் வெளியிட்டார் விஷால். இனி எந்த தயாரிப்பாளர்களுக்கும் இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என்றார்.
இதற்காகத்தான் இந்த விவகாரத்தை மகாராஷ்டிரா முதல்வர், பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் நடிகர் விஷால் அளித்த புகாரின் பேரில் 3 இடைத்தரகர்கள் மற்றும் மெர்லின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகிய மூன்று அதிகாரிகளின் பெயர் சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மும்பையில் 4 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலை சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி தனது மேலாளர் ஹரிகிருஷ்ணனுடன் நடிகர் விஷால் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications