ஷிண்டேவை விடுங்க.. பாஜக கூட்டணியை கலாய்த்து வீடியோ வெளியிட்ட குணால் கம்ரா.. கொதிக்கும் பாஜக
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கலாய்த்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா. இந்த சர்ச்சைக்கு நடுவே அவர் பாஜகவை கிண்டல் செய்து இன்று வீடியோ வெளியிட்டு இருப்பது மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருகின்றன. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார்.

சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் அமைச்சரவையிம் இந்த 3 கட்சிகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தான் ஏக்நாத் ஷிண்டேவை பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது குணால் கம்ரா என்பவர் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியன்களில் ஒருவர். இவர் நம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று காமெடி செய்து வருகிறார். குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அவர் நையாண்டி செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தான் மும்பை கார் பகுதியில் ஹோட்டலுடன் சேர்ந்த ஹெபிடெட் காமெடி கிளப் உள்ளது. இந்த கிளப்பில் குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குணால் கம்ரா, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் ஹிந்தி பாடலின் வரிகளை மாற்றி பாடினார். அதில் ஷிண்டே பெயரை அவர் குறிப்பிடவில்லை. இருப்பினும் அந்த பாடல் வரிகள் என்பது மறைமுகமாக ஷிண்டேவை குறிக்கும் வகையில் இருந்து.
இது சிவசேனா கட்சியினரை கோபப்படுத்தியது. இதையடுத்து நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சென்ற சிவசேனா கட்சியினர் அந்த இடத்தை சூறையாடினர். அதன்பிறகு குணால் கம்ராவுக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‛‛குணால் கம்ரா தனது செயலுக்கு மன்னிப்பு கோர வேண்டும்'' என்று கூறினார். ஆனால் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதோடு கொலை மிரட்டல் விடுத்த சிவசேனா கட்சியினருக்கு நான் தமிழ்நாட்டில் தான் உள்ளேன். முடிந்து வாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படியான சூழலில் தான் இன்று மீண்டும் பாஜகவை சீண்டும் வகையில் குணால் கம்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது குணால் கம்ரா நிகழ்ச்சி நடந்த இடத்தை சிவசனோ கட்சியினர் அடித்து சேதப்படுத்தியது தொடர்பான வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பின்னணியில் இந்தி மொழியில் Hum Konge Kangaal என்ற பாடலை பாடி பாஜக கூட்டணி ஆட்சியை விமர்சனம் செய்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது பாஜக, சிவசேனா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படைய வைத்துள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications