டிராபிக்கில் சிக்கிய விமானி! மாற்றாக வந்து பலியான சுமித் கபூர்.. அஜித்பவார் விமான பைலட்டின் சோக கதை
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உள்பட 5 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் விமான விபத்தில் பலியான பைலட் சுமித் கபூர் பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. உண்மையில் அந்த விமானத்தை இயக்க வேண்டியது வேறு ஒரு பைலட். ஆனால் அவர் டிராபிக்கில் சிக்கியதால் தான் சுமித் கபூர் விமானத்தை இயக்கி பலியானதாக உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் காலையில் அஜித் பவார் விமான விபத்தில் பலியானார்.

மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பிரசாரத்துக்காக மும்பையில் இருந்து அஜித் பவார் பாராமதிக்கு சிறிய ரக தனி விமானத்தில் புறப்பட்டார். பாராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது கீழே விழுந்து வெடித்து தீப்பற்றி எரிந்தது.
விமானிகள் யார் யார்?
இதில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார், அவரது பாதுகாவலர் விடிப் ஜாதவ், உதவியாளர் பிங்கி மாலி, 2 பைலட்டுகளான சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகியோரும் பலியாகினர். இதில் பைலட் சுமித் கபூருக்கு 15,000 மணிநேரத்துக்கு மேல் விமானத்தில் பறந்த அனுபவம் உள்ளது. அதேவேளையில் துணை விமானி ஷாம்பவி பதக்கிற்கு 1,500 மணிநேரத்துக்கு மேல் பறந்த அனுபவம் இருந்தது.
மாற்று பைலட்டாக வந்தவர்
விபத்தில் சிக்கிய லியர்ஜெட் 45 ரக விமானம் டெல்லியை சேர்ந்த விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்நிலையில் தான் விமான விபத்தில் பலியான பைலட் சுமித் கபூர் குறித்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி அவரது நண்பர்கள் கூறியுள்ளதாவது:
‛விபத்தில் சிக்கிய விமானத்தில் கேப்டனாக சுமித் கபூர் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் ஹாங்காங்கில் இருந்து ஊருக்கு வந்தார். ஓய்வில் இருந்தவருக்கு தான் விமானத்தை இயக்கும்படி அழைப்பு வந்தது.
உண்மையில் அந்த விமானத்தை சுமித் கபூர் இயக்க வேண்டியது கிடையாது. இன்னொரு பைலட் தான் இயக்க வேண்டும். ஆனால் டிராபிக்கில் அந்த பைலட் சிக்கியதால் சரியான நேரத்துக்கு வர முடியவில்லை. இதனால் அந்த பைலட்டுக்கு பதில் சுமித் கபூர் விமானத்தை இயக்கினார்.
தவறு செய்ய வாய்ப்பில்லையாம்
தேர்தல் பிரசாரத்திற்காக மும்பையில் இருந்து பாராமதிக்கு அஜித் பவாரை அழைத்துச் செல்லும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது. சுமித் கபூருக்கு நீண்ட காலம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த விபத்து குறித்து முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று கண்கலங்க கூறியுள்ளனர்.
கைச்செயினால் உடல் அடையாளம்
மேலும் சுமித் கபூர் பற்றி அவரது நண்பர் சச்சின் தனேஜா கூறுகையில், ‛‛விபத்தில் பலியான சுமித் கபூரின் உடல் அவரது கையில் அணிந்திருந்த கைச்செயின் மூலமாக அடையாளம் காணப்பட்டது'' என்று கூறினார். நரேஷ் தனேஜா கூறுகையில், ‛‛சுமித் கபூர் விமான விபத்தில் இறந்ததாக வெளியான செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை. பொய்யாக இருக்க கூடாதா?'' என்று நினைத்தோம்.
மகன் - மருமகனும் பைலட்டுகள்
அதேபோல் ஜிஎஸ் குரோவர் என்ற நண்பர் கூறுகையில், ‛‛ஹாங்காங்கில் இருந்து திரும்பிய பிறகு என்னிடம் செல்போனில் பேசினான். உடல்நலம் குறித்து பல அறிவுரைகளை வழங்கினான். உடல்நலனை நன்கு கவனித்து கொள்ளும்படி கூறினான். ஆனால் இப்போது எங்களை விட்டு மறைந்துவிட்டான்'' என்று கண்கலங்கினார்.
சுமித் கபூருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. அதுமட்டுமின்றி அவரது மகனும், மருமகனும் சுமித் கபூரை போல் பைலட்டுகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications