Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ajit Pawar Plane Crash: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்!!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரத் துணை முதல்வர் அஜித் பவார் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. அஜித் பவார் பயணித்த விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகச் சொல்லப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மகாராஷ்டிராவில் இப்போது பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் நிலையில், ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

Ajit Pawar Plane Crash-Lands in Baramati while landing Maharashtra shocker What really happened

அஜித் பவார் மரணம்

இதற்கிடையே மகாராஷ்டிரா துணை முதல்வரும், என்சிபி தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இன்று புதன்கிழமை காலை மாநிலத்தின் பாராமதியில் தரையிறங்க முயன்றபோது விபத்தில் சிக்கியது. விமானம் வெடித்து சிதறியதாகவும் மிக பெரியளவில் தீ கிளம்பியதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது

காலை 8:45 மணியளவில், மும்பையிலிருந்து ஜில்லா பரிஷத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அவர் அங்கு சென்றுள்ளார். அந்த விமானத்தில் அஜித் பவார், அவருடன் ஒரு விமானி, தனிப் பாதுகாவலர் மற்றும் மேலும் இருவர் இருந்துள்ளனர். விமானத்தில் பயணித்த அனைவரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். அங்கு மீட்கப்பட்ட அஜித் பவார் உள்ளிட்டோரின் உடல் பாராமதி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பிரதமர் மோடி இரங்கல்

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் எதிர்பாராத மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மறைந்த அஜித் பவாருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் "அவர் மக்களை நேசித்த தலைவர், மக்களுடன் வலுவான பிணைப்பைக் கொண்டிருந்தவர். மகாராஷ்டிர மக்களுக்குச் சேவை செய்வதில் எப்போதும் முன்னணியில் நின்ற, கடின உழைப்பாளி என அனைவராலும் மதிக்கப்பட்டார்.

நிர்வாக விஷயங்களில் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. ஏழை மற்றும் பின்தங்கியோரை மேம்படுத்துவதில் அவரது ஆர்வம் கவனிக்கத்தக்கது. அவரது அகால மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா

இது தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா, "மகாராஷ்டிரத் துணை முதலமைச்சரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவருமான அஜித் பவார், துரதிர்ஷ்டவசமான விபத்தில் உயிரிழந்த செய்தி ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மகாராஷ்டிர மக்களின் நலனுக்காய் அவர் ஆற்றிய தன்னிகரற்ற சேவை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. சந்திக்கும் போதெல்லாம் மக்கள் நலன் குறித்தே நீண்ட நேரம் பேசுவார்.

துயரத்தில் உள்ள பவார் குடும்பத்திற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!" என்று பதிவிட்டுள்ளார்

ராஜ்நாத் சிங்

அஜித் பவார் மரணம் தனக்கு அதிர்ச்சியையும் மன வேதனையையும் ஏற்படுத்துவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "அவரது நீண்ட பொது வாழ்வில், மகாராஷ்டிரா மாநிலத்தின் வளர்ச்சிக்கும் ஒருமித்த செழிப்புக்கும் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மக்களின் மீது கருணையும், அர்ப்பணிப்பும் கொண்ட தலைவராக அவர் அறியப்பட்டார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+