மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர் அஜித்பவார்.. ஆதரவாளர்கள் ஒட்டியதால் பரபரப்பு
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர் அஜித் பவார் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாராமதி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் சரத்பவாரின் அண்ணன் மகனாவார். சரத்தின் அரசியல் வாரிசாக கருதப்பட்டவர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அஜித் பவார், தனது சொந்த கட்சியை முதுகில் குத்திவிட்டு பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து அவரை சட்டசபை என்சிபி எம்எல்ஏக்களின் குழு தலைவர் பதவியிலிருந்து அஜித் பவாரை சரத்பவார் நீக்கிவிட்டார்.

முதல்வர்
கடந்த செவ்வாய்க்கிழமை மிகவும் ஆச்சரியமான நடவடிக்கையாக துணை முதல்வர் பதவியை அஜித் பவார் நீக்கினார். இதையடுத்து தம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என கருதிய முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

செய்தியாளர்கள்
இதையடுத்து பாஜக அரசு கவிழ்ந்தது. நேற்றைய தினம் அஜித்பவார் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் நான் என்சிபியில்தான் இருக்கிறேன். நான் அங்கிருந்து விலகிவிட்டேன் என எங்கேயாவது பார்த்தீர்களா என செய்தியாளர்களை எதிர் கேள்வி கேட்டார்.

இறையாண்மை
இந்த நிலையில் எம்எல்ஏவாக பதவியேற்ற அஜித்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் என்சிபி கட்சியின் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ என்ற முறையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டேன். நமது அரசியலமைப்பின் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்டுள்ளேன். இறையாண்மையை காப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர்
இந்த நிலையில் பாராமதியில் மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர் அஜித் பவார் என குறிப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் திடீரென போஸ்டர்களை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் நீங்கள் எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என்பது குறித்து தற்போது முடிவு செய்யலாம். உங்களை வருங்கால முதல்வராக எதிர்நோக்கி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவே காத்து கொண்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications