Ajit Pawar: அஜித் பவார் மரணத்தை முன்கூட்டியே கணித்த ஜோதிடர்? வைரலாகும் பழைய ட்வீட்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் இன்று விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மரணத்தை பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கணித்து கூறியுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. அவர் என்னென்ன விஷயங்களை கணித்திருக்கிறார் என்பதையும் பார்க்கலாம்.
அஜித் பவார் கட்சி நிகழ்ச்சிக்காக தனது பாதுகாவலர்களுடன் தனது சொந்த ஊரான பாராமதிக்கு விமானத்தில் சென்றனர். அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவசர அவசரமாக விமானி தரையிக்க முயன்ற போது தரையில் மோதிய விமான தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தால் அந்த பகுதி முழுக்க கரும்புகை சூழ்ந்தது. விபத்தில் விமானத்தில் இருந்த அஜித் பவார், விமானி, இரு பாதுகாவலர்கள் என 4 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்த விமான விபத்தால் மகாராஷ்டிராவில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அஜித் பவார் இறப்பு குறித்து ஜோதிடர் பிரசாந்த் கினி என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கணித்துள்ளார்.
இதுகுறித்து தனது பழைய ட்வீட்டை மேற்கோள்காட்டி பிரசாந்த் கூறியிருப்பதாவது: "டிசம்பர் 2025 - பிப்ரவரி 2026- க்குள் ஒரு பிரபல அரசியல்வாதி இறப்பார் என நான் கணித்திருந்தேன். தற்போது விமான விபத்தி மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்துள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.

தனது பழைய ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: டிசம்பர் 2025 - பிப்ரவரி 2026- க்குள் இந்தியாவை சேர்ந்த முதல்வராக அல்லது மத்தியமைச்சராக இருக்கும் ஒரு அரசியல்வாதி இறப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் பீகார் மாநிலத்தின் முதல்வராக இனி நிதிஷ் குமாரால் பதவியேற்க முடியாது என்பதையும் பிரசாந்த் கணித்திருந்தார். அது போல் நடந்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு குறித்தும் அவர் சரியாக கணித்துள்ளார்.
இந்த நிலையில் அஜித் பவார் மரணத்தை தான் கணித்ததாக கூறும் ட்வீட்டிற்கு பலரும் பிரசாந்துக்கு வாழ்த்துகளை கூறியும் பலர் விமர்சித்தும் ட்வீட் போட்டுள்ளார்கள். அதில் ஒரு நெட்டிசன், "டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை யாராவது அரசியல்வாதி இறப்பார் என்ற உங்கள் கணிப்பு கண்மூடித்தனமான யூகம்தான். இது உண்மையான ஜோதிடம் அல்ல.
ஆண்டுதோறும் முன்னாள் முதல்வர்கள் அல்லது அமைச்சர்கள் என இந்தியாவில் 2 முதல் 5 அரசியல்வாதிகள் வயோதிக காரணத்தால் இறக்கிறார்கள், கடந்த டிசம்பர் மாதம் 90 வயதில் சிவராஜ் பாட்டீல் காலமானார். அஜித் பவார் இன்று காலமானார். இது சாதாரணமான யூகம்தான். இதில் ஒன்றும் மேஜிக் இல்லை" என தெரிவித்துள்ளார்.
அது போல் இன்னொரு நெட்டிசன், அஜித் பவார் ஒன்றும் நீங்கள் (பிரசாந்த் கினி) குறிப்பிட்டது போல் முதல்வரோ அல்லது மத்தியமைச்சரோ அல்ல என தெரிவித்துள்ளார்.
இன்னொரு நெட்டிசன், "சில அரசியல்வாதி இறப்பார் என சொல்வது எளிது. ஆனால் நீங்கள் ஒரு கைதேர்ந்த ஜோதிடர் என்றால் எந்த மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதி இறப்பார் என்பதை சொல்லியிருக்க வேண்டும்" என்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications