முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு இத்தனை காஸ்ட்லி பொருட்களா? ஸ்லோகாவின் பர்ஸ் விலை தெரியுமா?
மும்பை: இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன், மருமகளுக்கு சொந்தமான விலை உயர்ந்த பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
இந்தியாவின் உள்ள பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது தந்தை திருபாய் அம்பானி விட்டுச் சென்ற நிறுவனத்தை இன்று பல நிறுவனங்களாக்கி அவருடைய சொத்து மதிப்பை பில்லியன்களுக்கு கொண்டு சென்றுவிட்டார்.

இதற்கு முழு முக்கிய காரணம் அவருடைய மனைவி நீடா அம்பானியின் நிர்வாக திறமை என்பதை மறுக்க முடியாது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக உள்ள முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் குறித்த விஷயங்களை தெரிந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் நீடா அம்பானியின் டயட், அவர் உடுத்தும் ஆடைகள், அதன் வடிவமைப்பு, ஆபரணங்கள், ஆபரணங்களில் பதிக்கப்படும் விலைமதிப்புள்ள கற்கள், நீடா வைத்திருக்கும் ஹேண்ட் பேகுகள் என இப்படி பல விஷயங்களை படிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். முகேஷின் சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
அவரும் அவர் குடும்பத்தினரும் வைத்திருக்கும் ஆடம்பர கார்கள், விலையுயர்ந்த பொருட்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அந்த வகையில் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி ஸ்லோகா மேத்தா ஆகியோர் வைத்திருக்கும் காஸ்ட்லி பொருட்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
ஆகாஷுக்கு ஏற்கெனவே ஒரு மகன் உள்ள நிலையில் அண்மையில் அந்த தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இவர்களது திருமணமே ஆடம்பரமாக நடந்தது. மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் 2019 இல் ஆகாஷ்- ஸ்லோகாவுக்கு திருமணம் நடந்தது. ஸ்லோகா வைர வியாபாரியின் மகளாவார். இருவரது பெற்றோரும் பணக்காரர்கள் என்பதால் இவர்களும் ஆடம்பர வாழ்க்கையையே வாழ்கிறார்கள்.
அந்த வகையில் ஸ்லோகா தனது தந்தையின் ரோஸி ப்ளூ டயமென்ட்ஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். இவர்கள் அன்டிலியாவில் வசித்து வருகிறார்கள். அங்கு 27 மாடிகள், 9 லிப்ட்கள், தியேட்டர்கள், 168 கார் காரேஜுகள் என உலகிலேயே அதிக மதிப்பிலான வீடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இங்கு பனிஅறையும் உள்ளது. வெயில் காலத்தில் அம்பானி குடும்பத்தினர் இங்கு நேரத்தை செலவிடுவார்களாம்.
இந்த வீட்டின் இன்றைய மதிப்பு 20 ஆயிரம் கோடி என சொல்லப்படுகிறது. இந்த ஜோடிக்கு சொந்தமாக சொகுசு கார்களும் உள்ளன. இவர்களிடம் உள்ள கார்களின் மதிப்பு குறைந்த பட்சம் ரூ 60 லட்சம் கொண்ட பென்ஸ் முதல் 4 கோடி ரூபாய் கொண்ட ரேஞ்ச் ரோவர் வரை உள்ளது. இவர்களது ஆடைகளும் உயர் ரக பிராண்டுகளாகவே இருக்கும்.
ஸ்லோகா ஒரு நிகழ்ச்சியின்போது ஹெர்ம்ஸ் ஆரஞ்சு பாப்பி எவர்கிரீன் லெதர் பர்ஸுடன் செல்லும் புகைப்படம் வைரலானது. இந்த பர்ஸின் விலையே ரூ 6 லட்சமாம். 450 கோடி மதிப்பிலான வைர நெக்லஸை ஸ்லோகா வைத்திருக்கிறார். இது திருமணத்தின் போது மாமியார் நீடா அம்பானி, ஸ்லோகாவுக்கு பரிசாக கொடுத்ததாம். இத்தனை கோடிக்கணக்கிலான விலையுயர்ந்த பொருட்களை இவர்கள் வைத்துள்ளனர்.
இவர்கள் அணியும் ஆடைகளும் லட்சக்கணக்கில் ஆகும். அதிலும் வீட்டு திருவிழா என்றால் கேட்கவே வேண்டாம். மாமியார் நீடாவே அழகான வேலைபாடுகள், லட்சக்கணக்கான மதிப்பு கொண்ட உடைகளை அணிவார். ஸ்லோகாவை கேட்கவா வேண்டும். ஒரு விழாவுக்கு போட்ட உடைகளையும் நகைகளையும் இவர்கள் மீண்டும் போட மாட்டார்களாம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications