ஒன்டிக்கு ஒன்டி வர்றியா?.. வம்பிழுத்த அன்டர்டேக்கர்.. ஜெர்க் அடிச்சி எஸ் ஆன அக்ஷய்குமார்!
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை பிரபல மல்யுத்த வீரர் அன்டர்டேக்கர் சண்டைக்கு அழைத்த போது முதலில் எனக்கு காப்பீடு இருக்கிறதா என பார்த்துவிட்டு வருகிறேன் என நாசூக்காக தவிர்த்த காட்சிகள் இணையத்தை சிரிப்பலையில் மூழ்கடித்துள்ளது.
பாலிவுட் நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவர் 1996-ஆம் ஆண்டு வெளியான கிலாடியான் கா கிலாடி (Players of Player)என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதில் ரெஸ்ட்லிங் வீரரான அன்டர்டேக்கருடன் மோதி வெற்றி பெறுவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த காட்சியில் மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் வேடத்தில் நடித்த ஒரு நடிகரை அக்ஷய் குமார் வீழ்த்துவார்.
வரவேற்பு
இந்த காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் அதை கொண்டாடும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷய் குமார் ஒரு மீமை பதிவிட்டிருந்தார். அதில் அண்டர்டேக்கரை தோற்கடித்தவர்கள் கைகளை உயர்த்துங்கள் என போட்டுள்ளார்.

ட்ரிபிள் ஹெச்
பின்னர் அதில் பிராக் லெஸ்னர், ட்ரிபிள் ஹெச், ரோமன் ரெய்ன்ஸ் ஆகியோர் படத்துடன் தன்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். மேலும் கிலாடியான் கா கிலாடி படத்தில் அண்டர்டேக்கர் வேடத்தில் நடித்தவர் பிரெய்ன் லீ என குறிப்பிட்டுள்ளார்.

சவால்
இந்த மீம் வைரலான நிலையில் இது அண்டர்டேக்கரின் காதுகளை எட்டியது. அவர் உடனே, " மீண்டும் உண்மையாக மோதுவதற்கு நீங்கள் எப்போது தயார் என சொல்லுங்கள்" என சவால் விடுத்திருந்தார் அண்டர்டேக்கர்.

காப்பீடு
இதை படித்ததும் ஜெர்க்கான அக்ஷய்குமார், எனக்கு காப்பீடு ஏதேனும் இருக்கிறதா என செக் செய்து விட்டு திரும்ப வருகிறேன் சகோதரா என சைக்கிள் கேப்பில் அக்ஷய் எஸ் ஆகிவிட்டார். இது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் படித்துவிட்டு நகைச்சுவையாக பகிர்ந்து வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications