இந்திய வரைப்படம் மீது நடக்கும் வீடியோ! "பணத்திற்காக அக்ஷய் குமார் எதையும் செய்வார்" குவியும் கண்டனம்
இந்திய வரைப்படத்தின் மீது அக்ஷய் குமார் நடக்கும் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கண்டனம்
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்திய வரைப்படத்தின் மீது நடப்பது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவராக உள்ளவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் எந்நிரன் 2.0 படத்தில் பக்ஷிராஜன் எனும் கேரக்டரில் நடித்திருந்தார். செல்போன் கோபுரங்களை அமைப்பதால் பறவைகள் இறப்பதாக கூறி அதற்காக போராடும் கேரக்டரில் நடித்திருந்தார்.
அக்ஷய் குமாருக்கு ரோபோ 2.ஓ படத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. இவர் ஏற்கெனவே பிரதமர் மோடியை கடந்த 2019ஆம் ஆண்டு பேட்டி எடுத்திருந்தார். இதில் அரசியல், தேர்தல் தொடர்பு அல்லாத அக்ஷய்குமாரின் பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.

நேர்காணல்
இது போன்ற நேர்காணல்களில் பிரதமர் மோடி பங்கேற்காமல் இருந்த நிலையில் இந்த நேர்காணலில் அவர் பங்கேற்றிருந்தார். அந்த நேர்காணல் குறித்து அக்ஷய் குமார் ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். பிரதமர் மோடி குறித்து அக்ஷய் குமார் கூறுகையிஸ் ஒரு சாமானியர் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்களை என் இதயத்திலிருந்து நேராக அவரிடம் கேட்டேன்.

தலைகீழாக கடிகாரம்
நம் பிரதமர் ஏன் தலைகீழாக கடிகாரத்தை அணிந்துள்ளார் போன்ற விஷயங்களை நான் தெரிந்து கொள்ள விரும்பினேன். அவரிடம் அவரது கொள்ளைகளை பற்றி கேள்வி கேட்டு இருந்தால் எனக்கு மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும். அது என் வேலையில்லை. அப்படி செய்திருந்தால் அது போலியாக தோன்றியிருக்கும் என தெரிவித்தார்.

குழந்தையாக மாறும் மோடி
பிரதமர் மோடி, குழந்தைகளிடம் பேசும் போது குழந்தையாக மாறி பேசுவார். அது போல் தன்னை தானே வடிவமைத்து கொள்ளும் திறன் அவரிடம் அடங்கி உள்ளது என்றும் அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார். தற்போது அக்ஷய் குமார் இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடித்துள்ள செல்பி திரைப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகிறது.

வடஅமெரிக்கா
இந்த நிலையில் அக்ஷய் குமார் வடக்கு அமெரிக்காவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்வதற்காக கத்தார் ஏர்வேஸ் சார்பில் ஒரு விளம்பர வீடியோ எடுக்கப்பட்டது. இதை தனது சமூகவலைதளத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் நடைபெற்ற பாலிவுட் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியை அக்ஷயை குமார் பகிர்ந்திருந்தார்.

அக்ஷய் குமாருடன் யார் நடிக்கிறார்கள்
அந்த வீடியோவில் அக்ஷய் குமாருடன் மவுனி ராய், நோரா ஃபதேஹி, திஷா பதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோவில் அக்ஷய்குமாரும் பலரும் இந்தியா மற்றும் உலக உருண்டையில் நடப்பது போல் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது நெட்டிசன்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் அக்ஷய் குமார் இந்திய வரைப்படத்தில் நடக்கிறார்.

மார்ச் மாதம்
அந்த வீடியோவில் பொழுதை போக்க விரும்புகிறவர்கள் வடஅமெரிக்காவுக்கு அழைத்து செல்ல தயாராக இருக்கிறார்கள். உங்கள் சீட் பெல்ட்டை போடுங்கள் மார்ச் மாதம் வருகிறோம் என்ற கேப்ஷன் உள்ளது. அதாவது மார்ச் மாதம் முதல் கத்தார் ஏர்வேஸ் தனது சேவையை வடஅமெரிக்காவுக்கு தொடங்குகிறது போல் உள்ளது.

அவமதிப்பு
இந்த ட்வீட்டிற்கு கீழ் நிறைய பேர் அக்ஷய் குமாரை திட்டி கமென்ட் போட்டுள்ளார்கள். அதில் ஒருவர் சகோதரரே கொஞ்சமாவது நம் நாட்டிற்கு மரியாதை கொடுங்கள் என்கிறார். இன்னொருத்தர், என்ன மாதிரியான பழக்கம் இது? நாட்டை அவமதிக்கிறீர்கள்? என்கிறார் இன்னொரு நெட்டிசன். மிகவும் வெட்கமாக இருக்கிறது.

பணத்திற்காக
கத்தார் ஏர்வேஸ் விளம்பரத்திற்காக இந்திய வரைப்படம் மீது அக்ஷய் குமார் நடக்கலாமா? அக்ஷய் குமாரின் தரத்தை தாழ்த்துகிறது. பணத்திற்காக அக்ஷய் குமார் எதையும் செய்வார் என்கிறார் இன்னொரு நெட்டிசன். பாரத் மாதாவின் மீது கால் வைக்கிறீர்கள். இவ்வாறு அக்ஷய் குமாரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம்












Click it and Unblock the Notifications