ஷிண்டே தரப்பு வேட்பாளருக்கு சென்ற EVM மெஷினின் OTP.. மும்பை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு?
மும்பை: மும்பை வடமேற்கு தொகுதியில் வாக்குப்பதிவின் போது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரும்பான்மையான இடங்களை வென்று மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்தது. ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களை போல இந்த முறை பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவுக்கு சறுக்கல் கொடுத்த மாநிலங்களில் முக்கியமானது மகாராஷ்டிரா.

இம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றின. இந்நிலையில், மும்பையின் வடமேற்கு தொகுதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த தொகுதியில் ஷிண்டே தரப்பு சிவசேனா தரப்பில் ரவீந்தர தத்தாராம் வைக்கரும், உத்தவ் தரப்பு சிவசேனா சார்பில் அமோல் கஜனன் கீர்த்திகர் ஆகியோர் களமிறங்கியிருந்தனர். இந்த தேர்தலில் 48 வாக்குகள் வித்தியாசத்தில் ஷிண்டே தரப்பு வேட்பாளர் வெற்றி பெற்றார்.
ஆனால், அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடத்தி அதன் மூலம் வெற்றி பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து அம்மாநில எதிர்க்கட்சி தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. புகாரில்,
"கடந்த ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அப்போது அந்த இடத்தில் தற்போது 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் ரவீந்திர வைகரின் மைத்துனர் மங்கேஷ் பாண்டில்கர் இருந்திருக்கிறார். தபால் வாக்குகள் பதிவாகியிருந்த பெட்டிகளை திறக்க தேர்தல் அதிகாரியின் மொபைல எண்ணுக்கு ஒடிபி (OTP) அனுப்பப்படும். ஆனால், அவருக்கு பதிலாக பாண்டில்கரின் செல்போனுக்கு ஒடிபி வந்திருக்கிறது" என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த புகாரின் அடிப்படையில் பாண்டில்கர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக உள்ள உத்தவ் தாக்ரே சிவசேனா தரப்பில் மட்டுமல்லாது வேறு சில கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களிடமிருந்தும் இது தொடர்பாக புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாண்டில்கரின் செல்போன் பயன்படுத்தப்பட்டது குறித்து தேர்தல் அலுவலரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது காலை முதல் மாலை 4:30 மணி வரை பாண்டில்கர் தனது செல்போனை பயன்படுத்தியிருக்கிறார். இதனை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். தேர்தல் விதிமுறைகளின்படி, ஒடிபி பெறப்படும் செல்போன் தேர்தல் அதிகாரியிடம் இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த செல்போன் ஒடிபி பெறப்பட்டவுடன் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். விதி இப்படி இருந்தும் ஏன் பாண்டில்கர் செல்போனை கொடுக்கவில்லை? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications