"பெட்ரோல் போட்டு கட்டுப்படி ஆகல!" கடுப்பில் குதிரை வாங்கி.. அதில் ஆபிஸ் போகும் மகாராஷ்டிரா இளைஞர்
மும்பை: அதிகரிக்கும் பெட்ரோல் விலையைச் சமாளிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கையாண்டு வரும் நிலையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவர், மீண்டும் சில நூற்றாண்டிற்குப் பின்னால் சென்றுவிட்டார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.
அதேபோல டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர இளைஞர்
கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை என்பது சாமானியர்களின் பட்ஜெட்டை கடுமையாகப் பாதிக்கிறது. பெட்ரோல், டீசல் விலையால், பொதுமக்கள் சொந்த வானங்களைப் பயன்படுத்தி வேலைக்கு செல்லாவதும் கூட பெரிய செலவாக மாறிவிட்டது. இந்த பிரச்சினையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கையாண்டு வரும் நிலையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவர், மீண்டும் சில நூற்றாண்டிற்குப் பின்னால் சென்றுவிட்டார்.

குதிரை
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் யூசுப். பெட்ரோல், டீசல் விலையைச் சமாளிக்க இவர், குதிரை ஒன்றை வாங்கி, அதில் தனது ஆபீஸுக்கு சென்று வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது பைக் வேலை செய்யவில்லை என்பதாலும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அதைச் சமாளிக்கக் குதிரையை வாங்கியதாக ஷேக் யூசுப் தெரிவித்தார். இந்த குதிரையை வாங்க ரூ 40 ஆயிரம் செலவானதாகவும் இப்போது அலுவலகத்திற்குக் குதிரை மூலமே சென்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரோக்கியம்
அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆய்வக உதவியாளராக பணிபுரியும் யூசுப், தினமும் குதிரை சவாரி செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவுரங்காபாத்தின் முக்கிய சாலைகளில் யூசப் குதிரையில் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. காலத்தில் பின்னோக்கிச் சென்ற இவருக்கு வாழ்த்துகள் எனச் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் குதிரைக்கான செலவுகள் என்பது பெட்ரோல் செலவை விட அதிகமாகவே இருக்கும் எனச் சிலர் தெரிவித்துள்ளனர்.
|
பெட்ரோல் விலை
இந்தியாவில் கடந்த நவ. மாதம் தீபாவளி அன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் , டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படு வருகிறது. கடந்த நவ. மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 80 டாலர் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 140 டாலரை தொட்டுள்ளது. இதனால் வரும் காலத்தில் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என அஞ்சப்படுகிறது












Click it and Unblock the Notifications