நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரிக்கு எதிராக சதி? பாஜக, ஆர்.எஸ்.எஸ். இடையே சிண்டு முடியும் சிவசேனா!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் லோக்சபா தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை தோற்கடிக்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கூட்டு சதித் திட்டம் தீட்டியதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

நாக்பூர்.. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் உள்ள தொகுதி. அதற்காகவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கோட்டைதான் என அடித்துச் சொல்லவும் முடியாது. நாக்பூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 4 இடங்களில் பாஜகவும் 2 இடங்களில் காங்கிரஸும் வென்றிருக்கிறது. கடந்த 2014, 2019 தேர்தல்களில் தொடர்ச்சியாக பாஜகவின் நிதின் கட்காரி வென்று வருகிறார். 1998 முதல் காங்கிரஸ் வென்றுள்ளது. அதற்கு முன்னர் பாஜகவும் வென்றுள்ளது.

lok sabha election 2024 bjp nagpur Nitin Gadkari 2024

ஆனாலும் நாக்பூர் என்றாலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமை அலுவலகம்; அது செல்வாக்கு செல்லுத்தக் கூடிய தொகுதி என்பதால் இங்கு பாஜக வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதுவும் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் செல்லப் பிள்ளை என அழைக்கப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை எப்படியாவது வெல்ல வைக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். செயல்பாடு.

இந்த நிலையில் நிதின் கட்காரியை எப்படியாவது தோற்கடித்து அவரை சீனியாரிட்டி பட்டியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என பிரதமர் மோடி- அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ் கோஷ்டி திட்டம் போட்டு செயல்பட்டு வருவதாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அதிரடியாக குற்றம் சாட்டி இருக்கிறார். ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையே தடை செய்யப் போகிறது பாஜக என பகிரங்கமாக சொன்னவர்தான் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிரா அரசியலில் அத்வானி காலத்து ஆள் நிதின் கட்காரிதான். ஆனால் மோடி- அமித்ஷா அணியானது ஒவ்வொரு மாநிலத்திலும் சீனியர்களை ஓரம் கட்டுவதும் புதியதாக ஒருவரை உருவாக்குவதும் வழக்கமானதுதான். அந்த வகையில் நிதின் கட்காரியின் அரசியல் அத்தியாத்துக்கு முடிவுரை எழுதிவிட்டு தேவேந்திர பட்னாவிஸை கொண்டு வர நினைக்கின்றனராம். இதனால் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரி தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிற அஜெண்டாவுடன் மோடி-அமித்ஷா- பட்னாவிஸ் அணி செயல்படுகிறது என கொளுத்திப் போட்டுவிட்டார் சிவசேனாவின் சஞ்சய் ராவத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+