தண்ணீரில் மிதக்கும் சொர்க்கம்..கடலில் அம்பானியின் கல்யாண பங்க்ஷன்! ஆனந்த்-ராதிகா ரெடி ஆகிட்டாங்களே!
மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய இரண்டாவது கொண்டாட்டங்களுக்கான பயணம் குறித்து தெரிந்து கொள்ள பாலிவுட் உலகமே ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த கொண்டாட்டங்கள் இத்தாலி மற்றும் பிரான்சில் கப்பலில் நடைபெறும் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
நீ என்ன பெரிய அம்பானியா என சாதாரணமாக பேச்சு வழக்கில் ஒருவரை கிண்டல் செய்து பார்த்திருப்போம்.. அந்த அளவுக்கு உலகம் முழுக்க இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு நபர்தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி.

திருபாய் அம்பானியின் மகன்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி சொத்து பிரிவுக்குப் பிறகு தனித்தனியாக தங்கள் பிசினஸ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்கள். ஆனாலும் அதில் ஜெயிச்சது என்னவோ முகேஷ் அம்பானி தான்..
டெலிகாம், பெட்ரோல், டெக்னாலஜி, டெக்ஸ்டைல், அப்படின்னு அவர் கால் வைக்காத இடமே கிடையாது. புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது போல் முகேஷ் அம்பானியின் வாரிசுகளான ஆனந்த அம்பானி இஷா அம்பானி ஆகாஷ் அம்பானியும் தங்களது தந்தையின் ஒவ்வொரு தொழிலையும் தனித்தனியாக கவனித்துக்கொண்டு வருகின்றனர்.. இப்படியான நிலையில்தான் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் நடக்க இருக்கிறது.
குஜராத்தைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரான விரன் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்சன்ட் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் ஆனந்த் அம்பானி. உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை ஆனந்த் அம்பானி சந்தித்தபோது அவருக்கு பக்கபலமாக நின்றவர் ராதிகா. தற்போது இருவரது நட்பு திருமணம் வரை சென்றிருக்கிறது. இந்த நிலையில் தான் ஜூலை 12ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சும்மாவா என்பது போல இப்போது இருந்தே இந்தியா முழுவதும் அம்பானி வீட்டு கல்யாணம் தான் பேசுபொருளாக இருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் மூன்று நாள் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் சல்மான் கான், ஷாருக்கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களோடு உலக அளவிலான பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மூன்று நாளைக்கு ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்பட்டது மக்களோடு மக்களாக பழகிய அம்பானி குடும்பம் அவர்களுக்கு உணவு பரிமாறியும் மகிழ்ந்தது. இந்த நிலையில் தற்போது அம்பானி வீட்டு திருமணத்தில் இரண்டாவது பெரிய வெட்டிங் நிகழ்வுகள் எங்கே நடக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள இணையவாசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களது வீட்டு திருமணத்தின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் நிகழ்ச்சி இத்தாலி மட்டும் பிரான்சில் கப்பலில் நடைபெற இருப்பதாகவும் இதில் பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ஆலியா பட் சல்மான்கான் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
நிகழ்ச்சிக்காக விருந்தினர்களை அழைத்து வருவதற்காக தனியாக சாட்டர்ட் விமானங்களை அம்பானி குடும்பம் தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மே 29ஆம் தேதி 12 மணி முதல் இந்த ஃப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. விருந்தினர்களுக்கு வரவேற்பு விருந்தும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேற்கத்திய உடை கலாச்சாரத்துடன் நட்சத்திர இரவு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
முப்பதாம் தேதி ரோமன் ஹாலிடே அமைப்புடன் விருந்தும், மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 31ஆம் தேதி முக்கிய விருந்து நிகழ்ச்சியில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதும் பிரம்மாண்ட விருந்தோடு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications