கார் வாங்கியதை செம குத்தாட்டம் போட்டு கொண்டாடிய குடும்பம்.. ஆனந்த் மகிந்திரா என்ன சொன்னார் தெரியுமா?
மும்பை: கார் வாங்கியதை ஆடிப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடிய குடும்பம் குறித்து ஆனந்த் மகிந்திரா ஒரு ட்வீட் போட்டு என்ன சொல்லியுள்ளார் தெரியுமா?
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா எப்போதுமே ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருப்பார். மண்டே மோட்டிவேஷன், மனிதாபிமான செயல்கள், ஒருவரின் தனித்திறமைகள் உள்ளிட்ட விஷயங்களையும் தனது ட்வீட்கள் மூலம் சுட்டிக் காட்டுவதில் வல்லவர்.

தமிழகத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி இத்தன விலைவாசி உயர்வு காலத்திலும் கூட ரூ 1 க்கு இட்லி கொடுத்து வருகிறார். யாராவது அந்த 1 ரூபாய் கூட இல்லை என்றால் பரவாயில்லை என விட்டுவிடுவாராம்.
இவருக்கு அண்மையில் ஆனந்த் மகிந்திரா ஒரு வீடு கட்டி கொடுத்திருந்தார். அது போல் கேரளாவில் 2018 ஆம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவ பெண் ஒருவர் படகில் இருந்து இறங்க தனது தோளை கொடுத்த சம்பவத்தையும் ஆனந்த் மகிந்திரா பாராட்டியிருந்தார். அத்துடன் அந்த பெண்ணுக்கு மாராஸோ காரை பரிசாக வழங்கினார்.
தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் ஜீப் தயாரிக்கும் திறமையை கண்டு அவருக்கு தன்னுடைய நிறுவனத்தில் வேலை போட்டு கொடுத்தார். தெலுங்கானாவில் பழைய பொருட்கள் மூலம் கார் தயாரித்த இளைஞரை பாராட்டியிருந்தார். அது போல் சென்னை திநகரில் அசாத்திய திறமையால் ஓவியம் வரைந்த ஒரு இளைஞரை பாராட்டியிருந்தார். அது போல் கொல்லிமலையின் அழகை பாராட்டியிருந்தார்.
இது போல் பல்வேறு தருணங்களில் பலரது திறமைகளை தனது ட்வீட் மூலம் நிறைய பேர் அறிய வழிவகை செய்கிறார் ஆனந்த் மகிந்திரா. இவர் தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் தனது நிறுவனத்தின் காரை வாங்கிய குடும்பத்தினர் அந்த கார் டெலிவரி பெறும் போது குடும்பத்துடன் நடனமாடி மகிழ்வது குறித்து ஆனந்த் மகிந்திரா ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் சொந்தமாக கார் வாங்கியதை குதூகலமாக கொண்டாடுகிறார்கள். தினாநாத் சாஹு என்பவர் தனது குடும்பத்தினருடன் கார் டெலிவரி பெற வந்தார்.
அவருடைய 23 ஆவது திருமண நாளன்று அந்த கார் டெலிவரி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த சாஹு, மனைவி, மகன், மகள், குடும்பத்தினருடன் அந்த கார் முன்பு நடனமாடி மகிழ்கிறார்கள். இந்த வீடியோவை ஆட்டோமொபைல் டீலர்களின் சங்கத் தலைவர் ட்வீட் போட அதை ஆனந்த் மகிந்திரா ரீட்வீட் செய்துள்ளார். அதில் மக்களின் மகிழ்ச்சிதான் ஆட்டோமொபைல் தொழிலில் இருக்கும் என்னை போன்றோருக்கு வெகுமதி என தெரிவித்துள்ளார்.
நமக்கே நமக்கான கார் என்பதில் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பர் என பல நெட்டிசன்கள் ட்வீட் போட்டுள்ளார்கள். பொதுவாக கார் வாங்கினால் அதன் முன்பு போட்டோ எடுத்துக் கொண்டு ட்விட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்டவைகளில் வெளியிடுவோம். ஆனால் இந்த குடும்பத்தினர் ஆரவாரத்தில் மகிழ்ச்சியாக நடனம் ஆடியுள்ளார்கள்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications